Friday, January 21, 2022
Wednesday, February 13, 2019
குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி
கேஷியஸ் கிளே என்று அழைக்கப்பட்ட அந்த 12 வயது ஆக்ரோசமான முரட்டுச் சிறுவன் குத்துச்சண்டை பயின்று வெற்றிகளை மட்டுமே குவித்தான் 20 வயதில் உலகில் சிறந்த குத்து சண்டை வீரர்களை எல்லாம் தோற்கடித்தான். உலகின் ஹெவி வெய்ட் பாக்சராக வென்றதும் கேஷியஸ் கிளே மக்களைப் பார்த்து ”Who is the greatest… Who is the greatest” என்று கோப ஆக்ரோசமாக வெறி கொண்டு கேட்டான்.
மௌனமாக இருந்த மக்களை பார்த்து ”Cassius clay is the greatest” என்று கூவினான். அரங்கம் ஆர்பரித்தது “Clay is the greatest” அதன் பின் அவனின் எல்லா போட்டிகளிலும் ‘Clay is the greatest’ என்பதே முழக்கமாக இருந்தது.
மொத்த போட்டிகள் 61. வெற்றி பெற்றது 56. நாக் அவுட் முறை வெற்றி 37. வெற்றி வாய்ப்பு நழுவியது 5. இது அந்த ஆக்ரோச இளைஞனின் சாதனை வரலாறு.
பின் ஒரு நாளில் இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கேஷியஸ் க்ளே இஸ்லாமைத் தழுவினார். முஹம்மது அலி என பெயர் கொண்டார். செய்தி அறிந்து பேட்டிக்கு குவிந்தனர் நிருபர்கள்.
அவர்களை பார்த்து கேட்டார். “Who is the greatest…?” நிருபர்கள் “Muhammed Ali is the greatest” என்றனர். Who is the greatest என்று வினவும் போதெல்லாம் பதில் வரும் வரை ஆக்ரோசமாக இருப்பவர் புன்னகையுடன் அமைதியாக கை உயர்த்தி “Allah is the greatest”, என்றார். கூடியிருந்த கூட்டமும் அதையே கூறியது.
அந்த முஹம்மது அலி என்னும் சாதனையாளர் 1942 ல் கேஷியஸ் க்ளேவாக ஜனித்து முஹம்மது அலி என ஆனவர் 2016 ல் அமெரிக்க காலண்டர் படி ஜூன் 3 அன்று, (இந்தியக் காலண்டர் படி ஜூன் 4 மாலையில் ) மரணம் அடைந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Wednesday, December 12, 2018
ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?
ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?"
விளக்கம்:
பகுத்தறிவுள்ள மனிதன் மட்டும்தான் மற்றொருவரிடம் முறையிட முடியும்,பகுத்தறிவில்லாத ஷரீஅத் எப்படி முறையிடும் என்பது அவரது சந்தேகம்.
பகுத்தறிவில்லாத பேரிச்ச மரமட்டை கண்மணி நாயகம்صل الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டது. பகுத்தறிவில்லாத குடும்ப உறவு அல்லாஹ்விடம் முறையிட்டது.
ஸஹுஹான ஹதீஸ்களில் வந்த செய்தி கள் இவை.
ஜாபிர் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி صلى الله عليه وسلم அவர்கள் நின்று குத்பா ஓதிய ஒரு பேரிச்ச மரத்தின் அடித்தூண் இருந்தது புதிய மிம்பர் வைக்கப்பட்ட போது.(கர்ப்பிணி ஒட்டகைகளிலிருந்து வெளிப்படுவது போன்ற) அழுகுரலை நாங்கள் அந்தப்பேரீச்சைத் தூணிலிருந்து கேட்டோம்.அப்போது நபிصل الله عليه وسلم அவர்கள் இறங்கி வந்து தமது கையை அதன் மீது வைத்தார்கள்
(புஹாரி,எண்:918)
அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹுத்தஆலா படைப்புகளைப் படைத்து முடித்த போது குடும்பம் உறவு எழுந்தது.'என் உறவை விட்டும் விலகிவிடுவதைப் பற்றி உன்னிடம் காவல் தேடும் நேரம் இது என்றது.
'உன்னை இணைத்தவர்களை நானும் இணைப்பதும்,உன்னைத் துண்டித்தவர்களை நானும் துண்டிப்பதும் உனக்கு திருப்தி தானே!
என்று அல்லாஹ் பதிலுரைத்தான்"
(பஹாரி,எண் 5987).
பகுத்தறிவில்லாத பேரீத்த மரக்கட்டையும்,குடும்ப உறவும் முறையிடும் போது அறிவுகளின் சங்கமமான ஷரீஅத் முறையிடுவதில் என்ன ஆச்சரியம்?
தான் கேட்டும்; அறிந்தும் மட்டும்தான் உண்மை என்ற இறுமாப்பினால் வந்த வினைதான் இவை போன்ற விமர்சனங்கள்.
sahmith Nooriyyah

முஹ்யத்தீன் மவ்லீத் பற்றி தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள்
மார்க்கத்தின் முறையீடு
விமர்சனம்:~ 01
விமர்சனம்:~ 01
அபூபக்கர் அல்ஹமாமி" என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவராகவும் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட செயல்கள் உடையவராகவும் இருந்தார். அவரிடம் "அப்துல் காதிர் ஜீலானி" அவர்கள் நீ வரம்பு மீறியதால் உன்னைப்பற்றி ஷரீஅத் என்னிடம் முறையிடுகின்றது' என்று கூறினார்கள். மேலும் சில காரியங்களை விட்டும் அவரை தடுத்தார்கள். அவர் தவிர்ந்து கொள்ளவில்லை.
அவரது நெஞ்சில் கையை வைத்து "அபூபக்கரே!" பக்தாதை விட்டும் அதன் சுற்றுப்புறங்களை விட்டும் வெளியேறு என்று கூறினார்கள்.
இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவரைப்பற்றி ஷரீஅத் எப்படி முறையிடும்?
விளக்கம்:~
இறைவனால் என்ற சொல் இவராகச் சேர்த்துக்கொண்டது மவ்லிதில் அவ்வாறு இல்லை
كان من ذي الأحوال الرضية والأفعال المرضية
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட நிலைகளும்
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட செயல்களும் உடையவராக இருந்தார்.
என்பதுதான் இதன் பொருள்.
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட நிலைகளும்
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட செயல்களும் உடையவராக இருந்தார்.
என்பதுதான் இதன் பொருள்.
அவருடைய வெளிப்படையான நிலைகளும் செயல்களும் மக்களால் பொருந்திக்கொள்பவையாக இருந்தன.
அந்தரங்கத்தில் அவரிடம் சில குறைகள் இருந்தன. இதன் படி பொருந்திக்கொள்வதற்கும் ஷரீஅத் முறையிடுவதற்குமிடையில் முரண்பாடு எதுவுமில்லை. "இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட" என்று பொருள் வைத்தாலும் ஷரீஅத் முறையிடுவதில் பிரச்சினை ஏதுமில்லை .

இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்களிடம் சிற்சில தவறுகள் நிகழலாம்.
நபிமார்கள் மலக்குகளிடம் தவறுகள் நிகழாது. மற்றவர்களிடம் பாவங்கள் நிகழலாம் என்றிருக்க அவர்களிலும் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் உள்ளனர்.
நபிமார்கள் மலக்குகளிடம் தவறுகள் நிகழாது. மற்றவர்களிடம் பாவங்கள் நிகழலாம் என்றிருக்க அவர்களிலும் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் உள்ளனர்.
அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் நபிமார்கள் மலக்குமார்கள் மட்டும் இல்லையே!
ஸஹாபாக்களிடம் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஸஹாபாக்களைக் குறித்து அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்.
(தவ்பா:100) Qur'an: At-Tawba (9:100)
وَلسَّٰبِقُونَ لْأَوَّلُونَ مِنَ لْمُهَٰجِرِينَ وَٱلْ أَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحْسَٰنٍ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّٰتٍ تَجْرِى تَحْتَهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيم
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
என்று அல்குர்ஆனில் கூறுகின்றான்.
எனவே இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட ஒருவரைப்பற்றி ஷரீஅத் முறையிடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
விமர்சனம்:- 02
"யாரும் இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்பதற்கு இவை சான்றுகள்"
"யாரும் இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்பதற்கு இவை சான்றுகள்"
விளக்கம்:- ' எந்தப் பார்வைகளும் அவனை அடையாது' (6:103) 'மூஸா நபியால் அவனை பார்க்க இயலவில்லை' (7:43) என்பன போன்ற சில ஆதாரங்களைச் சொன்ன பிறகு மேற்ச்சொன்ன வாசகத்தை அவர் எழுதியுள்ளார். இந்த ஆதாரங்கள் இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் காண முடியாது என்பதைத் தெரிவிப்பதாக அவர் கருதுகிறார்.
'எந்தப் பார்வைகளும் அவனை அடையாது, என்பதன் பொருள் அல்லாஹு தஆலாவை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதாகும். அதைத்தான் குர்ஆனில் செல்லப்பட்ட ﻻتركه என்ற வார்த்தை குறிக்கும். அறவே பார்க்க முடியாது என்பதற்கு ﻻيبصر ﻻيري என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லப்பட்ட பதில் 'நிச்சயமாக நீங்கள் எஎன்னைப் பார்க்க மாட்டீர்கள் 'என்பதாகும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட உயர்ந்தவர்களான நபி صلى الله عليه وسلم அவர்கள் பார்ப்பதை இவ்வசனம் மறுக்கவில்லை.

மேலும் புறக் கண்களால் பார்ப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டபோதூ அது மறுக்கப்பட்டது.
இந்த மறுப்பு அகக் கண்களால் வலிமார்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதற்கு முரணாகாது.
விமர்சனம்:-
"மனிதர்களுடன் எவற்றைப் பேச அல்லாஹ் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான். எவரிடமும் இறைவன் பேசவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. என்ற சாதாரண அறிவு கூட மௌலிதை எழுதியவருக்கு இல்லை".
"மனிதர்களுடன் எவற்றைப் பேச அல்லாஹ் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான். எவரிடமும் இறைவன் பேசவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. என்ற சாதாரண அறிவு கூட மௌலிதை எழுதியவருக்கு இல்லை".
விளக்கம் :-
'மனிதர்களுடன் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான்' என்று கூறுதல் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்ட அஹ்லுல் குர்ஆன் எனும் நவீன இயக்கத்தினரின் வாதமாக ' குர்ஆன் மட்டும்தான் ஆதாரம், ஹதீஸ்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது 'என்று அஅவ்வியக்கத்தினர் கூறுகின்றனர். ஹதீஸ்கள் என்பவை நபி صلى الله عليه وسلم அவர்கள் சுயமாக சொன்னவை அல்ல .அவையும் அல்லாஹ் அறிவித்து கொடுத்தவைதான்.
ஹதீஸ்களில் 'ஹதீஸ் குத்ஸி' என்று ஒரு வகை உண்டு'அல்லாஹூ தஆலா சொன்னான்' என்று கூறி நபி صلى الله عليه وسلم அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள். இவற்றை மறுக்கும் விதமாக அவரது மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.
நபிமார்கள் அல்லாதவர்களுக்கு இல்ஹாம் மற்றும் மனாம்களின் மூலமாகவும் இறை அறிவிப்புகள் வெளிப்படுகின்றன.
'நநுபுவ்வதில் நின்றும் சுபச் செய்திகள் அல்லாமல் மிஞ்சவில்லை' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற 'சுபச் செய்திகள் என்பவை யாவை?'என ஸஹாபாக்கள் கேட்டனர். 'நல்ல கனவுகள் 'என நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள் (புஹாரி எண் :6990)

நபி صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள் :'முஃமினின் கனவு நுபுவ்வதின் நாற்பத்தி ஆறில் ஒரு பகுயாகும்' (புஹாரி எண்:6988)
கனவுகள் மூலமாகவும் அல்லாமலும் இறைவன் புறத்திலிருந்து தெய்வீக உதிப்புகள் வருகின்றன, அவை நுபுவ்வத்தை போன்ற உண்மையானவைதான் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றன.
ஆகவே அல்லாஹ் பேச நாடியவை குர்ஆன் மட்டும்தான் என்ற அவரது வாதம் சுக்கு நூறாக உடைகிறது.
F Asmiya Nooriyyah
விமர்சனம் : 03
அப்படியே முறையிடுவதாக இருந்தாலும் ஷரீஅத்துக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்விடம் முறையிடாமல் இவர்களிடம் ஏன் முறையிட்டது?
விளக்கம் :
(இது அறிவு சார்ந்த கேள்வி அல்ல!ஷரீஅத் சட்டங்களை உருவாக்கிய அல்லாஹுதஆலா தனது சட்டங்களை நேரடியாக அவனே வந்து உலகில் அமுல் படுத்தவில்லை.
(இது அறிவு சார்ந்த கேள்வி அல்ல!ஷரீஅத் சட்டங்களை உருவாக்கிய அல்லாஹுதஆலா தனது சட்டங்களை நேரடியாக அவனே வந்து உலகில் அமுல் படுத்தவில்லை.
நபிமார்கள் ,அறிஞர்கள்,ஆட்சியாளர்கள் மூ
லமாகத்தான் சட்டங்களை அமுல்படுத்துகின்ரான்.
லமாகத்தான் சட்டங்களை அமுல்படுத்துகின்ரான்.
இவ்வுலகில் மக்களுக்கு சட்டங்களை ஏவுபவர்களாகவும் ,மீறினால் அவர்களை தண்டிப்பவர்களாகவும் இம்மூன்று பிரிவினரும் இருக்கின்றனர் .
அல்லாஹுதஆலா குர்ஆனில் கூறுகின்றான்:
"நாம் பூமியில் பிரதிநிதிகளை நியமிக்கிறோம் "(அல்பகரா:30)
"நாம் பூமியில் பிரதிநிதிகளை நியமிக்கிறோம் "(அல்பகரா:30)
பூமியில் சரீஆத் சட்டங்களை அமுல்படுத்துபவர்களாக நபிமார்கள், ஆட்சியாளர்கள் இருக்கும் போது சட்டங்கள் மீறப்படும் நேரங்களில் அவர்களிடம் முறையிடுவதுதான் பொருத்தம்.
ஷரீஅத் சட்டங்கள் மீறப்பட்ட போது ஸஹாபாகள் ஷரீஅத் சட்டங்களுக்குச் சொந்தக்காரனான அல்லாஹ்விடம் முறையிடாமல் அல்லாஹ்வின் பிரதிநிதியான
கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடமும் ஏனைய ஸஹாபாக்களிடமும் முறையிட்டார்கள்.

அபூமஸ்வூத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடத்தில் வந்து 'அல்லாஹ்வின் ரஸூலே!அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். இன்ன நபர் தொழுகையை நீட்டுவது காரணமாக ஸுபுஹுத் தொழுகையில் கலந்து கொள்ளலாமல் இருக்கிறேன் என்று கூறிய போது நபி صلى الله عليه وسلم அவர்கள் வேறு எந்த நாளிலும் பார்த்திராத அளவு கடும் கோபத்துடன் அதைக் கண்டித்து சொற்பொழிவு வாற்றினார்கள் .(புகாரி :எண் 702)
ஸுபைர் இப்னு அதி رضي الله عنه அவர்கள் சொல்கிறார்கள் "நாங்கள் அனஸ் رضي الله عنه அவர்களிடம் சென்று ஹஜ்ஜாஜின் கொடுமைகளைச் சொல்லி முறையிட்டோம். பொறுத்துக் கொள்ளுங்கள் வருகிற ஒவ்வொரு கால கட்டமும் அதற்கு முந்தைய காலகட்டத்தை விட மோசமாகத்தான் இருக்கும். இதனை உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நான் கேட்டேன்"என்று கூறினார்கள்.(புகாரி :எண் 7068)
ஒரு ஸஹாபி தொழுகையை நீட்டிய போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். ஹஜ்ஜாஜிப்னு யூசுப் ஷரீஅத்துக்கு எதிராக கொடுமைகள் புரிந்த போது அனஸ் رضي الله عنه அவர்களிடம்
முறையிட்டார்கள். ஷரீஅத்துக்குச் சொர்தக்காரனான அல்லாஹ்விடம் முறையிடவில்லை.

Moulaviya A.R Asmiya Nooriyya
Moulaviya F Asmiya Nooriya
Moulaviya AR Aseena Nooriyyah
Thursday, November 8, 2018
சுவனத்துப் பேரரசி 14
அன்னை_ஃபாத்திமா_ரலியல்லாஹூ_அன்ஹா அவர்கள் வாழ்க்கை வரலாறு...!!
பாகம் :14
ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபி ஸல்லல்லாஹூ அலைகி வஸல்லம்
அவர்கள்,,,
தனதருமை மகள் ஃபாத்திமா
ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வீட்டிற்கு பேரக் குழந்தைகளைக் காணச்
சென்றிருந்தார்கள்...!
இருவரும் இல்லை.
மகளிடம்
விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள்.
இன்னும் சிறிதுநேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கூறினார்கள்.
நீண்ட நேரமாகியும்
இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் பேரக் குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள்.
மதீனாவின் எந்த ஒரு
பகுதியிலும் இருவரையும் காண வில்லை.
மதீனாவிற்கு வெளியே
பாலைவனத்தை நோக்கி நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்கள்
ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம்
விசாரித்த வண்ணம் சென்றார்கள்.
ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்களின் ,,,
முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து
என்ன ஏது? என்று விசாரித்தார்.
நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.
அப்போது, நாயகமே!
கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும்
இருப்பார்கள்.
சற்று முன்னர் தான்
இங்கு அவர்களை நான் கண்டேன்”என்று கூறிய அவர் அல்லாஹ்வின்
தூதரே!
ஒரு விஷத்தை நான்
உங்களிடம் நான் சொல்லலாமா” என
வேண்டினார்.
நபி ஸல்லல்லாஹூஅலைகிவஸல்லம் அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார்,,,,
“அல்லாஹ்வின் தூதரே!
சற்று முன்னர் தான் இருவரும் இங்கே
வந்தனர்.,,,,
அவர்கள் முகத்தில் நான்
பசியின் ரேகை படர்ந்திருந்ததை
பார்த்து விட்டு,
என் ஆட்டிலிருந்து
பால் கறந்து தரவா? என்று இருவரிடமும் கேட்டேன்...!!
அப்போது,
அவர்கள் இருவரும்”நீங்கள் இந்த மந்தையின்
உரிமையாளரா?” என்று
கேட்டார்கள். நான் இல்லை என்றேன்...!!
அப்படியென்றால்,,,
உங்கள் உரிமையில்
இல்லாத இந்த மந்தையில் உள்ள
ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று
கூறி மறுத்து விட்டு,,,
அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த
தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர்.
நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் அவர்கள் அந்த தோட்டத்திற்கு வந்து பார்க்கின்றார்கள்.
அங்கே ஓர் மரத்தின்
நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்....!!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் இருவரையும் எழுப்பி,
வாரி அணைத்து முத்தமிட்டு
இருதோள்புஜங்களிலும்
இருவரையும் சுமந்தவர்களாக
தங்களது மகளார் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா
அவர்களின் வீட்டிற்கு வந்து,,,,
“ஃபாத்திமாவே!
உம் தந்தை
முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை
உருவாக்கியிருக்கின்றாய்!
என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்..
இன்ஷா அல்லாஹ்
தொடரும்....!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

Wednesday, November 7, 2018
சுவனத்துப் பேரரசி பாத்திமா
சுவனத்துப் பேரரசி அன்னை பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வாழ்க்கை வரலாறு
ஒரு நாள் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் கிடந்தார்கள்....!!!!
கணவர் செய்யதினா அலி ரலிரலியல்லாஹூ அன்ஹூ பக்கத்தில் இருந்து பணிவிடைகள் செய்தார்கள்...!!
அப்போது,,,
மனைவியை நோக்கி,
அன்பு மனைவியே,,,
தாங்களுக்கு பிடித்த மானதை கேளுங்கள் வாங்கி வருகிறேன் என்றார்கள்....!!!!
இதுவரை கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டிராத ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் ,,,,
இருமனதோடு சரி எனக்கு மாதுளம் பழம் சாப்பிட ஆசையாக உள்ளது என்றார்கள்....!!
சந்தோஷம் தாங்க முடியாமல் கடைத் தெரு நோக்கி புறப்பட்டார்கள்....!!
கடைத்தெருவில் மாதுளம் பழம் கிடைக்க வில்லை....!!!!
அடுத்துள்ள ஒரு ஊரில் தான் மாதுளம் பழம் கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்று ஒரு பழம் வாங்கி கொண்டு வீடு நோக்கி மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.
வழியில் ஒரு ஏழை மனிதர் அந்த சாலை ஓரத்தில் மயங்கி கிடந்தார்.
உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள்....!!!!
அப்போது அவர் தம்பி பணிவிடைக்கு நன்றி எனக்கு ஒரு ஆசை இருக்கு அதை பூர்த்தி செய்வீர்களா? என்றார்.
சரி சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் செய்கிறேன் என்றார்கள்....!
உடனே அவர் எனக்கு மாதுளம் பழம் சாப்பிட நீண்ட நாட்களாக ஆசையாக இருக்கிறது வாங்கி தருவீர்களா...,,,
என்றதும்,,,,
அதிர்ச்சி அடைந்த அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் திக்கு முக்காடிப் போனார்கள்....!!!!
இருப்பதோ ஒன்று அதை இதுவரை எதுவுமே வாங்கி கேட்டிராத மனைவிக்கா?
அல்லது,,,,,,
இந்த வழிப் போக்கருக்கா? என்ற போராட்டம் மனதில் ஒடியது..!!
முடிவில் இது அல்லாஹ்வின் சோதனை என்று அந்த முதியவருக்கே கொடுத்து விட்டார்கள்....!!!!
பின்பு சோர்வுடன் வீடு நோக்கி வந்தார்கள் நோயில் கிடந்த பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா மிக்க முகலர்ச்சியுடன் கணவரை வரவெற்றார்கள்...!!
வழியில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்கள்...!
அதற்கு பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா தாங்கள் செய்த தர்மத்தால்.,, அல்லாஹ் எனது நோயை குணமாக்கினான் என்றார்கள்....!!!
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.திறந்த போது சல்மான்பாரிசி
ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் நின்றார்கள்...!!
கையில் ஒரு சிறிய கூடை இருந்தது.இறக்கி வைத்து விட்டு இவைகளை இன்னார் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார், என்று கூடையை ஒப்படைத்தார்கள்....!!!!
கூடையில் மாதுளம் பழம் இருந்தது. அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா இருவரும் பெரும் ஆச்சரியம் அடைந்தார்கள்...!!
அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹவைப் புகழ்ந்தார்கள்....!!!!
உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ கூடையில் இருந்த மாதுளம் பழ்ங்களை எண்ணினார்கள்...!!
அதில் 9-மாதுளம் பழங்கள் தான் இருந்தன. உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்,,, ஸல்மான் பாரிசி(ரலிரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களே, வீடு மாறி கொண்டு வந்து விட்டீர்கள் இது எங்களுக்குரியது அல்ல.,,, என்றார்கள்...!!
உங்களுக்காகத்தான் உங்களுக்கே உரியது தான் என்றார்கள்....!!!!
அதற்கு அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அல்லாஹ் குர் ஆனில் "மனிஜாஅ பில் ஹஸனத்தி அஸரத்தி அம்சாலிஹா" ஒரு நன்மை
செய்தால் அதற்கு அதுபோல 10 வழங்குவோம், என்று அல்லாஹ் சொல்கிறான்...!!!!
சற்று முன்நான் ஒரு மாதுளம் பழம் தர்மம் செய்தேன் ஒன்றுக்கு பத்து அல்லவா,,, வந்திருக்க வேண்டும்..?
கூடையில் 9 பழங்கள் தானே உள்ளது என்று விள்க்கமளித்தார்கள்.
இதைக் கேட்ட ஸல்மான் பாரிசி(ரலியல்லாஹூ ) அவர்கள் சட்டையில் மறைத்து வைத்துள்ள ஒரு மாதுளம் பழத்தை வெளியே எடுத்து கூடையில் போட்டார்கள்....!!!!
அலியே! உங்களை சோதிப்பதற்காகத்தான் வழியில் ஒரு பழத்தை எடுத்து மறைத்தேன் என்றார்கள்....!!
பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது,...!!
அல்லாஹ்வின் உதவியை நினைத்து மகிழ்ந்தார்கள்....!!!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
இன்ஷா அல்லாஹ்
தொடரும்......!!
மாபிர்
ஸித்றத்துல் முன்தஹா

Tuesday, November 6, 2018
நாயகத்தின் மீது நேசம் வைப்போம்
நாயகத்தின் மீது நாயகனின் நேசம். நாமும் வைத்திடுவோம்
மீலாது கொண்டாடிடுவோம் வாரீர் வாரீர்..
الصلاة والسلام عليك يا سيدي يا رسول ألله
ஆணவத்தை கழட்டி வைப்போம் நானென்ற மமதையை குழிதோண்டி புதைத்து வைப்போம். மாநபியின் மாண்புதனை மனமாற புகழ்ந்திடுவோம் வாரீர் வாரீர்....
கரைபடிந்த உள்ளத்தினை கவிநாயகரின் புகழ் மழையில் கழுவிடுவோம் வாரீர் வாரீர்....
பண்பு நபியின் மாண்புதனை அறிந்திடுவீராயின் அறுத்துடுவீர் அடுத்தகணமே உம்மை அரசாட்ச்சி கொள்ளும் உம் அம்மாரா நப்ஸுதனை
அறுத்திடுவோம் வாரீர் வாரீர்....
மூடர்களின் வாக்குதனில் தனை மாய்த்துக்கொண்ட மானிடரே!...
மானிடருக்காக மாரிடம் வென்று மனித ரூபம் கொண்டு மண்ணுலகம் வந்துதித்த மாமனிதரை போற்றிடுவோம் வாரீர் வாரீர்.....
கபுரதுவோ நம் காலடியில் நினைக்கையிலே கழங்கிடுதே.. மறுமையதோ நொடிப்பொழுதில் திடுக்கிடுதே கனப்பொழுதில் உலகத்தின் சிற்றின்பம்
வந்திடுமோ நமைக்காக்க??
காணல் நீராகிப் போகிடுமே...
"கழங்கிடும் நெஞ்சினிலே அமைதி தரும் அன்பு நபியை மன மாற அன்பு வைத்திடுவோம்".. வாரீர் வாரீர்.....
ஈருலகை வென்றிடலாம் மாநபியின் நேசத்தினால்.. மாமறையே பரைசாற்றிடுதே..
வல்லோன் இறையோன்
ஈருலகின் நாயகராம் எம் மாகராஸரை நேசம் கொண்ட மான்பதனை...
(நவினிக்க எம்மாநபியை (யாநபியே!!)) என்று கல்பினிக்க அழைக்கின்றான் எம்மிறைவன்..
நாமும் எம் கல்பினிக்க அழைத்திடுவோம், புகழ்திடுவோம்.. மீலாது கொண்டாடிடுவோம்
வாரீர் வாரீர்......
يا نبي سلام عليكم
يا رسول سلام عليكم
يا حبيب سلام عليكم
صلوات ألله عليكم
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஆலிமா ஏ.ஆர் அஸ்மியா நூரிய்யாஹ் மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி ஏறாவூர்.

Sunday, November 4, 2018
கண்மணி சஹாபாக்கள் கறையில்லா முத்துக்கள்
காரூண்யராம் நம் நபியின்
கல்பிலே குடி கொண்ட
கண்மணி சஹாபாக்கள்
கறையில்லா முத்துக்கள்!
அன்னலை அடி யொற்றி,
அவர் சொன்னதை செயல்படுத்தி,
மன்னிலே மறையொளி சுமந்து,
மனிதப் புனிதராய்மிளிர்ந்தோர்!
நிழல் இல்லா நபியின் நிழலாய் நின்று,
நிகரில்லா அன்பு அவர்மேல் கொண்டு,
அன்னவருக்காய் தம் இன்னுயிரை ஈந்து,
சுவனப் பூங்காவின் சொந்தமானார்கள்!
ஒளியிடம் ஒளி வாங்கி ஒளிரும் ஒளிச்சுடர்கள்!
உயர் தீனை தாங்கி நிற்கும்
தன்னிகரில்லா தியாகத் தூண்களே சஹாபாக்கள்!!
✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யா*
ஒரு பெண்ணுக்கு வெட்கம்
ஒரு பெண்ணுக்கு வெட்கம் இருக்குமானால் அவளது ஆடையில் ஒழுக்கம் இருக்கும்...
ஓர் ஆணுக்கு ஒழுக்கம் இருக்குமானால் அவனது பார்வையில் கண்ணியம் இருக்கும்...
ஆனால், இன்று பெண்களின் ஆடையில் ஒழுக்கமும் இல்லை... ஆண்களின் பார்வையில் கண்ணியமும் இல்லை...
மாற்றம் தேவை...
எப்போது பெண்களின் ஆடையில் கவர்ச்சியும் அலங்காரங்களும் குறைக்கப்படுமோ அப்போதுதான் அவர்கள் மீதான ஆண்களின் பார்வை கண்ணியமானதாக மாறும்...
மாற்றம் தேவை...
கவர்ச்சியாக உடை அணிந்திருக்கும் பெண்களைக் கண்டால் ஆண்கள் எல்லோரும் ஆசைப்படத்தான் செய்வார்கள் என்பது கசப்பான ஒரு வழமையாகி விட்டது நம் சமூகத்தில்... அவ்வாறு ஆசைப்படும் ஆண்கள் ஒன்றை நினைக்க வேண்டும் தன்னுடைய சகோதரியையோ இல்லை தாயையோ இல்லை மனைவியையோ யாராவது இப்படி தவறாகப் பார்க்கும்போது தனது உள்ளம் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் ஏனெனில்,நீஙகள் தவறாக பார்க்கும் அந்த பெண்களும் யாரோ ஒருவரின் தாய்தான்...சகோதரிதான்...மனைவிதான்...மகள்தான்
மாற்றம் தேவை...
பெண் என்றால் ஆண்களின் ஆசைக்கு மட்டும்தான் என்று எண்ணாதீர்கள்...பெண் என்பவள் விவரிக்க முடியாத கவிதை...விடை காண முடியாத கேள்வி...அனைத்தையும் தாண்டி பெண் என்பவள் பலமான ஒரு பலவீனம்...அவளுடைய பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்....
வாழ்க்கை அவளை ஏதாவதொரு தருணத்தில் ஒரு உன்னதமான தியாகியாக மாற்றியே விடுகின்றது.
தாயாக அவளின் தியாகம் சொல்லிலடங்காது...
மனைவியாக அவளின் தியாகம் எல்லையில்லாதது...
பெண்மை என்றாலே தியாகம்தானே...
உன் தாயும் ஒரு பெண்தான்...
உன் சகோதரியும் ஒரு பெண்தான்...
உன் மனைவியும் ஒரு பெண்தான்...
உன் மகளும் ஒரு பெண்தான்...
தவறாக பார்ப்பது ஆண்களின் தவறு...
அதே போல் தவறாக பாரக்க தூண்டுவது பெண்களின் தவறு...
திருந்துவோம்...திருத்துவோம்...
மாற்றம் ஒவ்வொருவரதும் மனதில் எழ வேண்டும்...
படித்ததில் பிடித்தது

Monday, October 29, 2018
ஏந்தல் நபி தாஹாவே

*ஏந்தல் நபி தாஹாவே*
என் கவியின் நாயகரே
ஏந்தல் நபி தாஹாவே
உம் புகழை நினைக்கயிலே
இனிக்கிறது என் இதய நதி!
ஏந்தல் நபி தாஹாவே
உம் புகழை நினைக்கயிலே
இனிக்கிறது என் இதய நதி!
முஹம்மதென்ற முத்துக்குள்
என் சிந்தையை சிறைபடுத்தி
புகழ் மாலை புனைகயிலே
இனிக்கிறது என் இதய நதி!
என் சிந்தையை சிறைபடுத்தி
புகழ் மாலை புனைகயிலே
இனிக்கிறது என் இதய நதி!
கண்ணுக்குள் கரு மணியாகி
கல்புக்குள் கலந்து உடலுக்குள்
கல்புக்குள் கலந்து உடலுக்குள்
உயிராய் உறைந்திருக்கும் உத்தமரே!
இனிக்கிறதே என் இதய நதி!
இனிக்கிறதே என் இதய நதி!
கணப்பொழுதேனும் கண்டிட ஏங்குகிறேன்
கனவிலேனும் காட்சி தாரீர் கருனை நபியே யாரஸூலே
விழிகள் தேடும் விடியலே!
விழிகள் தேடும் விடியலே!
✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யாஹ்*
Manaleerul Anwar ladies arabic college Eravur Srilanka
Friday, October 26, 2018
நபிகளாரின் மீது அன்பு கொள்பவர்களின் நிலை......!!!!
அவசியம் படிக்க வேண்டிய ஒரு சரித்திரம்
ஜுலைபீப் رضي الله عنهم. ஹதீஸ் வரலாறுகளில் ஒரு நபித்தோழரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள்...* உயரம் குறைவானவர்
* நேர்த்தியில்லாத உருவம்
* பரம்பரை சரித்திரம் இல்லாதவர்
* அவருடைய பெற்றோகள் பற்றிய எந்த தகவலும் இல்லை
* எந்த குலத்தவரும் சொந்தம் கொண்டாடப் படாதவர்
* அவர் ஒரு தனிமரமாக காணப்பட்டார். மதீனாவின் குழந்தைகளும் அவரைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்யும் நிலையில் இருந்தார்.
* எவரும் அவரை தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்பாத, நட்பு பாராட்டாத ஒரு நிலை.
பல நாட்கள் மதீனாவின் வீதிகளில் தன் நிலையை எண்ணி அழுதவண்ணம், தனிமையில் காலம் கடந்தது.
கண்மணி நாயகம் முகம்மதும் முஸ்தபா ﷺ அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்பாக ஜுலைபீப் رضي الله عنهم அவர்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.
அவர் நபிகளார் ﷺ அவர்களின் கூட்டத்தில் இருப்பார், அவர்களை செவுயுருவார். மிக குறைவாக பேசுவார். வெக்கத்தால் தலை குனிந்தவாறே இருப்பார்.
இப்போது இவர் நபிகளார் ﷺ; அவர்களின் தோழராய் ஆகிவிட்டார்.
ஒரு நாள் தோழர்களுடன் இருக்கும் நேரத்தில் நபிகளார் ﷺ அவரிடம் கேட்டார்கள்: ஓ ஜுலைபீப் رضي الله عنهم என்னிடம் நீ ஏதாவது கேள், உனக்கு விருப்பமான ஏதாவது உள்ளதா என்பதாக.
அவர் வெட்கம் கலந்த குரலில் கூறினார்,
ஓ அல்லாஹ்வின் தூதர் ﷺ, அவர்களே, எல்லாம் அல்ல அல்லாஹ் உங்களுடன் இருக்கும் பாக்கியத்தை தந்துள்ளானே. இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் என்பதாக.
நபிகளார் ﷺ கேட்டார்கள்: எனதருமை நண்பரே நீர் திருமணம் செய்ய ஆசைப் படுகிறீற என்பதாக. ஜுலைபீப் رضي الله عنهم அவர்களோ புன்னகைத்தார்கள், நம்மை யார் திருமணம் முடிக்க முன்வருவார்கள் என நினைத்தவாறு.
இருப்பினும், பதில் கூறினார். ஆம், அல்லாஹ்வின் தூதரே ﷺ என்பதாக.
நபிகளார் ﷺ அவர்கள் மதீனாவில் புகழ் பெற்ற ஒரு அன்சார் சஹாபியின் வீட்டுக்குச் சென்றார்கள். சென்று கூறினார்கள், நான் உங்களது மகளை பெண் கேட்டு வந்துள்ளேன் என்பதாக.
அந்த சஹாபியோ, யா ரசூல் ﷺ அவர்களே இதை விட சிறந்த பாக்கியம் எங்களுக்கு வேறு என்ன இருக்க முடியும் என்பதாக.
நபிகளார் ﷺ கூறினார்கள்: நான் எனக்காக கேட்கவில்லை. எனது நண்பர் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்காக என்றார்கள்.
அந்த சஹாபியோ மிக நொந்தவராக, ஜூலைபீப் رضي الله عنهم அவருக்காக என்றார்கள். நபிகளார் ﷺ ஆம் என கூறினார்கள்.
சஹாபி கூறினார், நான் எனது மனைவிடம் கலந்தாலோசனை செய்து வருகிறேன் என்பதாக. செய்தியைக் கேட்ட மனைவியோ, அழுகையும், ஒப்பாரியுமாக. நான் ஜுலைபீப் رضي الله عنهم அவரைத் தவிர எவருக்கு வேண்டுமானாலும் எனது மகளை மணமுடித்து குடுப்பேன் என்பதாக.
இவர்களின் உரையாடலைக் கேட்ட மகள் விபரம் கேட்டார் தனது பெற்றோரிடம். அந்த பெண்ணோ மதீனாவின் மிக சிறந்த அழகியாக போற்றப் பட்டவர். சிறந்த பயபக்தி உடைய அந்த பெண்மணி சதா வணக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
அவர் கூறினார் தனது தாயிடம், எனது அருமை தாயே, எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நபிகளாரின் ﷺ. கோரிக்கையை நிராகரிக்கப் போகிறீர்களா என்பதாக. மேலும், கூறினார் அந்த இளம் பெண், அல்லாஹ்வும், அவனது தூதர் ﷺ அவர்களும் ஒரு காரியத்தை முடிவு செய்ய, அதில் மாற்றுக் கருத்து சொல்ல எந்த இறை நம்பிக்கையாளருக்கும் உரிமை இல்லை என்பதாக
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் நம்மை இழிவு படுத்துவார் என நீங்கள் என்னுகிரீர்களா?
எவ்வளவு பெரிய சிறந்த நிலை ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு, அல்லாஹ்வின் தூதரே ﷺ உங்களின் மகளை பெண் கேட்டு வந்துள்ளார்கள். உங்களுக்கு தெரியாதா, மலக்குகளும் பொறாமைக் கொள்கின்றனர் அல்லாஹ்வின் தூதரிடம் ﷺ நெருக்கம் கொண்டவர்களைப் பார்த்து.
கூறுங்கள் நபிகளார் ﷺ அந்த சஹாபியை இங்கு அனுப்புவதற்கு. இதை விட சிறந்த பாக்கியம் வேறொன்றுமில்லை, இதை விட சிறந்த கணவர் வேறு எவரும் எனக்கு இருக்க முடியாது என்றார். மேலும் கூறினார் தாயிடம், நபிகளார் ﷺ சிறந்த பரிசுடன் நமது வீடு தேடி வர, நீங்களோ அழுதுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாக.
அடுத்த நாளே திருமணம் நடந்தது.
உத்மான் رضي الله عنهم மற்றும் அலி رضي الله عنهم அவர்கள் பரிசளித்தனர் பணக்குவியலை திருமண வலிமா மற்றும் தங்க வீடு வாங்குவதற்கும்.
குறுகிய காலத்தில் ஒரு போருக்கான அறிவிப்பு. மாமனார் கூறினார், மருமகனே நீங்களோ புதிதாய் திருமணம் ஆனவர். உங்களுக்கு இப்போது போர் கண்டிப்பு அல்ல, நீங்கள் உங்கள் மனைவியுடன் நேரத்தை சந்தோசமாக களியுங்கள் என்பதாக.
ஜூலைபீப் رضي الله عنهم, பல வருடங்கள் கழித்து திருமணம் புரிந்தவர். கூறினார்கள், மாமனாரிடம், உங்களுக்கு இது விசித்திரமாக இல்லையா. நமது தூதர் ﷺ அவர்களோ போர் முனையில், என்னால் எப்படி வீட்டில் எனது மனைவியுடன் சந்தோசமாக இருக்க முடியும் என்பதாக.
சின்ன உருவமான ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் கிட்டத்தட்ட அவரது உயரத்தில் வாழ் ஒன்றை ஏந்தியவராக போர்க்களம் நோக்கி சென்றார். மற்ற சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர், எப்போதும் அமைதியாக, வெட்கம் கொண்டவராய் காணப்படும் ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் இப்போது ஒரு சிங்கம் போல களத்தில் செல்கிறாரே என்பதைக் கண்டு.
போர்க் களத்தில் பாய்ந்து சென்று எதிரிகளை துவசம் செய்ய ஆரம்பித்தார்.
போர் முடிந்த பின்பாக நபிகளார் ﷺ கூறினார்கள் மற்ற சஹாபாக்களிடம் சென்று பாருங்கள் எவராவது தங்கள் குடும்பத்தில் திருபவில்லையா என்பதை அறிந்து வாருங்கள் என்பதாக. பதில் கிடைக்கப் பெற்றார்கள், இல்லை எல்லோரும் திரும்பி விட்டனர் என்பதாக. அப்போது நபிகளார் ﷺ அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள், "நான் எனது அருமை ஜுலைபீப் رضي الله عنهم அவர்களை இழந்து விட்டேன். அவரை சென்று பாருங்கள் என்பதாக.".
அங்கு கண்டனர் சஹாபாக்கள், ஏழு காபிர்களைக் கொன்று, அவரும் அங்கு சஹீதாக்கப் பட்டதை.
நபிகளார் ﷺ குழி தோண்டச் சொன்னார்கள். நபிகளார் ﷺ அவரின் உடலை ஏந்தியவண்ணம் கூறினார்கள், "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து" என்பதாக 3 முறைக் கூறினார்கள். மற்ற சஹாபாக்கள் கூறினார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு எவ்வளவு பெரிய சிறப்பை கொடுத்துள்ளான் என்பதாக.
சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர் அவரின் வாழ்க்கையை பார்த்து. அவர் அல்லாஹ்வையும், நபிகளார் ﷺ அவர்களையும் அதிகம் விரும்பினார் இதோ மிக சிறந்த நிலையை அவர் அடைந்து விட்டார். அவர் பார்க்க அழகாய் இல்லை, ஆனால் மிக அழகிய மனைவியை அல்லாஹ் கொடுத்தான். மிக ஏழை, ஆனாலும் மிக பணக்கார பெண்ணை கரம் பிடித்தார். சிறந்த பெண்மணி, பயபக்தி உடையவர், சிறந்த குலத்திலிருந்து மனைவி கிடைக்கப் பெற்றார்.
நபிகளார் ﷺ அவர்களும் கூறினார்கள் "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து".
மேலும் கூறப்பட்டது, அவரது தியாக மரணத்தால், அவரது ஜனாஸாவில் கலந்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மலக்குகள் வானத்தில் குவிந்துள்ளனர் என்பதாக. சுப்ஹானல்லாஹ்.
ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் தனிமையில் இருந்தார், எப்போது அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அன்புக்குரியவர் ஆனாரோ, அதுமுதல் அவர் தனி மனிதர் அல்ல.
இதுதான் நபிகளாரின் ﷺ மீது அன்பு கொள்பவர்களின் நிலை.
இன்ஷா அல்லாஹ்,
நாமும் நமது மனதில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் ﷺ அவர்கள் மீதும் அதிகம் அன்பு வைத்து, அவர்கள் வழி வாழ்ந்து மறுமையில் அவர்கள் நட்பு கிடைக்கப் பெற்றவர்கள் ஆவோமாக.
Abu Izzah
Wednesday, October 24, 2018
நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !
நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !
நீண்ட காலம் வாழ வேண்டும் எனறே ஒவ்வொரு மனிதனும் நினைக்கின்றான். சிறிய நோயாயினும் உடனே ஆஸ்பத்திரிகளும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் செல்கின்றான். நீ இன்று மரணித்து என்றால் அந்த வசனத்தை எவரும் ஜீரனிப்பதாக தெயவில்லை.
தான் மரணித்து விடுவதில் ஆர்வம் கொள்ளும் மனிதனை உணர்வுகளாலும் உள்ளத்தினாலும் ஒரு போதும் உவந்து கொள்ள மாட்டான். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யும் ஒருவருக்காக எதைக் கொடுக்கவும் எதைச் செலவு செய்யவும் தயராக இருக்கின்றான். உங்களுடன் கஷ்ட்டப்படுவதை விட நான் மௌத்தாகி விடுவது மேல் என்று தனது மனைவி கோபத்தை வெளியிடும் போது கணவர் கருத்து கொடுக்காமல் இருந்துவிடுவது உண்டு. என்னைக் கஸ்டப்படுத்தாமல் நீங்கள் இறந்து போய் விடுங்கள் என மனைவி கூறினால் தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறும் கணவன்கள் இல்லாமல் இல்லை. எல்லாம் நீண்ட கால வாழ்கையின் ஆசைதான்.
உங்களின் முன்னால் நான் உலகை விட்டு பிரிந்து விட வேண்டும் எங்களுக்கு வேறு யாரு உதவ இருக்கிறார்? ஏன்று மனைவி பாசக்கதையை அடுக்குகின்ற போது கணவனுக்கு ஒரு படி சந்தோசமாயினும் நோய்வாய்ப்பட்டு நொந்துபோய் இறந்துவிடுவேனோ? என்று தனது நிலையை நினைத்து ..இல்லை இல்லை உங்களை விட நான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உபாயமான ஒரு வார்த்தையை உதிர்த்துவான். எல்லாம் நீண்ட காலம் வாழ்வதற்கு நினைத்ததுதான். இடைக்காலத்தில் இறந்து விட எவர்தான் துணிகிறார்கள்.? நீண்ட காலம் உலக வாழ்வில் நிம்மதியாக வாழவே மனசுகொண்டு அதற்கான ஆய்வுகளையும் சத்து மாத்திரைகளையும் உட்கொள்கிறார்கள்.
நீண்ட காலம் வாழ்வதற்கு நேச நபி நாயகம் ﷺ அவர்கள் சொன்ன அறிவுரைகள் என்ன என்பதை ஆராய்வோம். தனது வருவாயின் பெருக்கத்தையும் தனது ஆயுளின் நீளத்தையும் விரும்பும் ஒருவர் தனது உறவினர்களைத் தளுவி நடந்து கொள்வாராக என நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பர் அனஸ் ஆதாரம் புகாரி முஸ்லிம்)
உரவினர்களை உபசரித்து நடக்கும் போது அவர்களின் பிரார்த்தனை நமக்கு உதவியாக அமைந்து விடுகிறது.குடும்பத்தினரின் பிரார்த்தனைகள் குவலயத்தில் நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகுக்கின்றது. உறவினறுடன் பகைத்துக் கொண்டு ஒதுங்கி வாழ்வதன் மூலம் யோசனை அதிகரிக்கிறது.இரத்த உறவுகளை துண்டிப்பதன் மூலம் யோசனை தலைக்கேறி இருதய வியாதி சர்க்கரை வியாதி அதிகரித்தல் போன்ற கஷ்டமான நோய்களுக்கு ஆளாகி விரைவாக உலகிலிருந்து விடை பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றான்.
இதனால்தான் இறைத்துதர் ﷺ அவர்கள் இரத்த உறவுகளுடன் பாசமாக இருக்க கருத்துப் பகர்ந்தார்கள்.உலகில் நீண்ட ஆயுளுக்கு எந்த வைத்தியரும் சொல்லாத மருந்தை மக்கத்து மாநபி அவர்கள் சொல்லியிருப்பது பெரும் பேறாகும்.
நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் ஒருவர் என்னிடத்தில் ஒரு செயலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளட்டும்.அவருக்கு நான் நான்கு விஷயங்களுக்குப் பொறுப்பேற்கிறேன்.அவர் தனது உறினரைத் தழுவி நடக்கட்டும்.அவரது ஆயள் நீளமாகும்.அவர் மீது உறவினர்கள் அன்பு செலுத்துவர்.அரன விஸ்தீரனம் ஏற்படும்.சுவர்க்கத்தில் நுழைந்திடுவார்.(கன்ஜூல் உம்மால்) எவன் தானம் செய்கிறானோ அவனுக்குத் தன்னாலேயே செல்வம் பெருகும்.( ஜேம்ஸ் ஸ்ரீபன்)
குடும்ப உறவினர்கள் பசி பட்டினியுடன் கஷ்டப்படும் போது அவர்களைக் கவனிப்பதன் மூலம் இரன விஸ்தீரனம் ஏட்படுகிறது. குடும்பத்தார்களின் அன்பு,பாசம் தன்னுடன் பிண்ணிப் பிணைந்திருக்கின்றது. எல்லாவற்றையும் விட சுவனம் செல்லும் வாய்ப்பு கிடைக்கின்றது. விட்டமின் வில்லைகளை உண்னுவதிலும் வெளிநாடுகளிருந்து தருவிக்கப்படுகின்ற பழச்சாறுகளையும் அருந்தி ஆயட்காப்புறுதியில் சேர்ந்து நோய் வரும் போது பணம் பெறலாம் என்றெல்லாம் மேல் எண்ணம் வைத்து தானும் தனது மனைவி பிள்ளைகளும் வாழ வேண்டும் எனத்துடிப்பவர்கள் நீண்ட காலம் தனது ஆயுளை நீட்டவல்ல உறவினர் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் உயர்தர நடவடிக்கைகளை ஏன் யோசித்து செய்யக்கூடாது.
மறுமைநாளில் ரஹ்மானுடைய அர்சின் கீழ் மூன்று சாரார் நிற்பார்கள்.
1.உறவினர்களைத் தழுவி நடப்பவர் அவருக்கு இம்மையில் ஆயுளிலும் விருத்தி ஏற்படுவதுடன் வருவாயும் பெருகும். அவருக்கு கப்பிரிலும் இடவசதி ஏற்படும்.
2.கணவரை இழந்த விதவைப் பெண். அவள் தனது சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்க்க வேண்டும் கருத்தில் அவர்கள் வாலிப வயதை எய்முத் வரை மறுமணம் முடித்துக் கொள்ளதவள்
3. அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு சமைத்து விருந்து படைப்பவர்(அறிவிப்பர் அனஸ் ரழி)
திருமணம் மடித்ததும் சிலர் உறவினர்களை அறவே மறந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு கிட்டியதும் உறவினர்களை விசாரிப்பதை விட்டு விடுகின்றனர். கடிதம் எழுதி களைத்துப் போன உறவினர்களும் போன் பண்ணி போதுமாகிப் போன குடும்பத்தினரும் ஆயிரம் ஆயிரம் இருக்கத்தான் செய்கின்றார்கள். வீடுääகல்வி குடர்காரியம் இவற்றுக்கொள்ளாம் உறவினர்களிடம் பணம் கேட்டு ஒரு பதிலுமில்லாது ஒதுங்கி வாழ்பவர்கள் அநேகம் அநேகம். ஒரு கவிஞர் பாடினார் “சொந்தங்கள் சொல்லத்தானே வெட்கங்கள்ääசோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்” இப்பாடல் சிலரின் வாழ்வில் அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்துன்றது. குடும்பங்களைப் பேனுவோம்.கோமான் நபி கூறியது போல் வாழ்வோம்.
Nafeesathuth Thahira ( Nooriyyah )
Tuesday, October 23, 2018
மாணவிகளுக்கான ஷரீஆ கற்கை நெறி
வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும்.
இன்ஷா அல்லாஹ் வாராந்தம் தொடர்ச்சியாக நடை பெறும் இக்கற்கை நெறிகளில் அனைத்து மாணவிகளும் கலந்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.
குறிப்பு : இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு இறுதியில் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க
சான்றிதல் வழங்கப்படும்.
கல்லூ}ரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவி
யு.எல் நவாஸ் உஸ்மானி : 778492721
கல்லூரியின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவி
எச்.எம்.எம் யூசுப் முஸ்தபி : 0756212102
மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்
Thursday, October 18, 2018
கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம் !
முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம் !
அறிவு ஞானம் காணாமல் போன ஒரு சொத்தாகும் என கருணை நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவினை தேடிப் படிப்பது ஆண்,பெண் இருபாலாருக்கும் கட்டாயக் கடமையாகும் என இன்னுமொரு ஹதீஸை இறைத்தூதர் ﷺ அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நாம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.முந்திய காலங்களில் பெண்கள் கடிதம் எழுத,கையப்பம் போடத் தெரிந்து கொண்டால் போதும் பெரிய அளவில் படிக்கத் தேவையில்லை என ஒரு காலம் இருக்கத்தான் செய்தது.
இன்று அந்த அமைப்புக்கள் மாறி பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் வேரூண்டியிருக்கிறது. சின்ன வயதிலே ஆண் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவதும்ääபெண் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புவதும் தற்போது தற்போது முற்றாக குறைந்து விட்டது. சிறுவர் பராமரிப்பு அமைப்புகளும்,சட்டங்களும் இம்மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று கூடக் கூறலாம்.
இன்னும் 2 மாதத்தில் புதிய ஆண்டில் பிரவேசிக்கப் போகின்றோம். அது கல்வி ஆண்டு.சிந்தனையாண்டு,இன்டநெட் யுகமஇப்படி அடுக்கிக் கொண்டு போகலாம். இந்த யுகத்தில் வாழப் போகும் நாம் மடத்தணங்களுக்கு மடியமைத்துக் கொடுக்காமல் கல்விக்கு ஏணியமைத்துக் கொடுக்க எம்மை நாம் மாற்ற வேண்டும்.
படசாலை பிள்ளைகளின் நன்மை கருதி பெற்றோர்கள் அழைக்கப்படும் போது கண்டிப்பாக பெற்றோர் சமூகம் கொடுக்க வேண்டும் . ஆசிரியர்களுக்கிடையில் இறுக்கமான பிணைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி வளர்ச்சியில் கால் ஊன்ற முடியும்.
நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் “நீ ஒரு அறிஞனாக இரு இல்லையேல் மாணவனாக இரு இல்லையேல் கல்விக்கு உதவுபவனாக இரு நான்காம் நபராக இராதே! என்று சொன்னார்கள்.
எப்போதும் தாகமுடையவர்களாக இருக்க வேண்டும்.கல்விக்கு முக்கியத்துவம் வழங்காமல் தனது போக்கில் போய்க் கொண்டிருப்பவர்களையும் அன்றாட வாழ்வில் சந்திக்கவே செய்கின்றோம். அவர்களைப்பற்றி சிந்திக்கவும் செய்கின்றோம்.
கல்விப்புத்துணர்ச்சி எல்லா மட்டங்களில் இருந்தும் ஊக்கமளிக்கப்பட வேண்டும். குறிப்பாக குத்பா மின்பர்கள் கல்வி வளர்ச்சிக்காக நிறைய நிறையப் பயன்படுத்தப் பட வேண்டும்.
பாடசாலைகளில் பிள்ளை படிக்கிறார்கள் என்ற உணர்வுடன் மட்டும் இருக்காது எப்படிப் படிக்கிறார்கள், எதனைப் படிக்கிறார்கள் அவர்களது குறிப்புப் புத்தகங்கள் எப்படியிருக்கிறது வீட்டு அப்பியாசங்களைச் சரிவரசந் செய்கின்றார்களா? என்பதை நாமும் பார்வையிடுவதுடன்,ஆசிரியர்களிடமும் வினவிப் பார்க்க வேண்டும்.
கல்விச் சுற்றலா,கல்விக் கண்காட்சி போன்றவற்றிற்கு நமது பிள்ளைகளை அனுப்புவதற்குக் கூட தயங்குகின்ற பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
கல்வியில்லாத இருட்டறை வாழ்கையில் இருந்து பெற்றாரகிய நாம் அறிவு வெளிச்சத்துக்கு வரவேண்டும். நமது வருங்காலச் செல்வங்கள் படிக்க வேண்டும். பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். என்ற நல்ல எண்ணங்களை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
இன்று திருணம்,கத்னா,குடிபுகுதல் போன்ற சாதாரண நிகழ்சிகளுக்கொல்லாம் இலட்சக்கணக்கில் செலவிடுபவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். அதே வேலை கல்விக் கண்ணைத் திறப்பதற்கு வறுமையொறு தடைக்கல்லாக இருப்பதால் கல்விப்பயணத்தை தொடர முடியாது பலர் மிகவும் தவிக்கின்றார்கள்.
இத்தகைய அறிவுத்தாகத்தில் இருந்து கஸ்டப்படுபவர்களுக்க நாம் கை கொடுத்து உதவி செய்ய வேண்டும். நமது சமூகத்தில் வைத்தியர்கள்,பொறியிலாளர்கள் ,சட்டத்தரணிகள் எழுது விளைஞர்கள் ,கணக்காளர்கள் மேல்பட்டதாரிகள் ,சிறந்த ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் போன்றோர் தொடரணியில் வெளிவர முஸ்லிம் சமூதாயம் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தை மட்டும் காலமும் நம்பிக் கொண்டிருக்காமல் கல்விக் கூடங்கள்,விஞ்ஞான கூடங்கள்,பொறியியல் பயிற்சிக் கல்லூரிகள் போன்றவற்றை உருவாகத் தெண்டிக்க வேண்டும். நாளை நமது இஸ்லாமிய உம்மத்து கல்வியறிவு இல்லாது கைகட்டி நிற்கக் கூடாது. அதற்காக செய்ய வேண்டிய அத்தனை சிரமங்களையும் இன்று முதல் தலைமேல் கொண்டு செயல் படுவோமாக!
Manaleerul Anwar
Aalima Nooriyyah
Saturday, October 13, 2018
நிலவின் கனவு

புகழாரம் கோர்த்து ஒரு பூமாலை இட்டு நபிநாதர் வாழ்வின் சுவையான நிகழ்வை நவின்றிட வந்தேன்-நாதரை புகழ்ந்தேன்
அன்பு நபி அப்போது அரும்பான சிறு குழவி,
அழகுருவே திரண்டு ஒரு தொட்டிலிலே தூங்கியது,
பால் நிலவு வானத்திலே பவனி வர- பௌர்ணமி நிலவோ தொட்டிலிலே துயில் கொள்ள,
தொட்டில் பௌர்ணமியின் வனப்பினிலே தோற்றுப் போனது வெண்ணிலவழகே!!
அன்னல் திருநபிகள் விழி மலர்ந்து ஆகாய திங்களினை நோக்கயிலே-
அழகு விரலை நீட்டி அதன் பக்கம் இஷாரா செய்தனரே
திரு நபியின் விரல் எங்கு சென்றதுவோ திங்களுமே அங்கு நகர்ந்து சென்றதுவே.....
விரலசைவில் விரைந்து நிலவும் நகர்ந்ததுவே!!!
அப்போது வெண்ணிலவு அண்ணலுடன் பேசியது பேசியது!!
அன்பு நபியே அகிலத்தின் ஜோதியே பூமியிலே பிறந்து பூவுலகம் சிறக்கச் செய்தீர்...
மிஃராஜ் சென்று வானுலகம் சிறக்கச் செய்வீர்...
அந்தோ என் ஆதாரமே!எப்போது என்னை தீண்டிடுவீர்?
ஓ நிலவே உன்னை தொட்டால் என்னவாவாய் வினாத்தொடுத்தார் வேந்தர் நபி
என் ஆதாரம் நீரே என் மூலமும் நீரே நீர் இன்றி நான் இல்லை
நீர் தீண்டினால் நான் இரண்டாய் பிளந்திடுவேன் என்னை இழந்திடுவேன் இருப்பை அழித்துக் கொள்வேன்!
கொஞ்சம் பொருத்திரு நிலவே வஞ்சம் தீர்த்திட கல் நெஞ்சன் அபூ ஜஹ்ல் வருவான் என்னிடம்
அப்போதுன் ஆவல் தீர்த்திடுவேன் உன்னைத் தீண்டிடுவேன் என்றார் ஏந்தல் நபி.
காலம் சென்றது வேளை வந்தது. வந்தான் அபூ ஜஹ்ல்.. முஹம்மதே நீர் நபியென நம்புவதெப்படி என்றான் நிரூபிக்க என் செய்ய வேண்டுமென்றார் நபி
பிளந்து காட்டிடும் சந்திரனை இரண்டாய்- சுட்டு விரலால் சாடை செய்தார் நபி-அக்கனமே சந்திரன் பிளந்ததிரண்டாய்!!!
சாடையால் சந்திரன் பிளந்த தென்று வாயடைத்து நின்றான் மடையன் அபூஜஹ்ல்..
மெய்ப்பொருள் யாதெனில் ஒளியே எம் நபி
ஒளி நொடியில் நிலவில் கடுகி தொட்டுப் பிளந்தது நிலவை!!!
நிலவைத் தீண்டியதால் இரண்டாய் பிளந்து பேரானந்தம் அடைந்தது நிலவு...!!
நிலவின் நீண்ட நாள் கனவு நனவானது அன்று!!!!
✍🏻 நூருல் ஈமானி
manaleerul anwar ladies arabic college Eravur Srilanka
Tuesday, October 9, 2018
முன்மாதிரி மிக்க இறைத்தூதர்
அன்பின் உருவாய் அகிலத்தின் தோன்றிய அன்னலார்,
பல தோற்றம் காட்டி பண்பை நிலை நாட்டி சாதனை வீரராய் சரித்திரம் படைத்துச் சென்றார்!
சக தோழருக்கு சிறப்பான தோழராய்,
அனைத்து மனைவியருக்கும் அன்பான கணவராய்,
அருமைப் புதழ்வருக்கு பொருத்தமான தந்தையாய்,
இன பந்துக்களுக்கு இனிய உறவினராய்,
கள வீரருக்கு கம்பீர தளபதியாய்,
வள நாட்டுக்காரர் வீர தலைவராய்,
இளங்காளையருக்கு இணையற்ற வழிகாட்டியாய்,
அனைத்து மாந்தருக்கும் அன்பான ஆசானாய்,
அனாதைகளை ஆதரிக்கும் அன்பராய்,
ஆதரவற்றோரை அரவனைக்கும் துணைவராய்,
படிக்காத பாவலராய், இஸ்லாத்தின் காவலராய்,
முன்மாதிரி மிக்க தலைவராய் வாழ்ந்து சென்றார் வள்ளல் நபி!!!
M.F நூருல் ஈமானி (NOORIYYA)
MANALEERUL ANWAR LADIES ARABIC COLLEGE
ERAVUR - SRILANKA

Sunday, September 16, 2018
ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மத்துல்லாஹ்

ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மத்துல்லாஹ்
தொழுகைக்காக மனிதன் நின்ற போது அவன் மொழியும் ஆரம்ப வார்த்தை இன்ன ஸலாதி வனுஸ்கி வமஹ்யாய வமமாதி லில்லாஹி ரப்பில் ஆலமீன். அதாவது நிச்சயமாக எனது வணக்கங்களும் தியாகங்களும் வாழ்வும் மரணமும் அல்லாஹ்விற்காக வேண்டியாய் இருக்கும்.
இப்படியாக தான் வாழ்ந்தாலும் உனக்காகவே எனது தியாகங்களும் வணக்கங்களும் என்று உறுதி கூறும் மனிதன் வணங்குவதும் இல்லை.தியாகங்கள் புரிவதும் இல்லை. அப்படியே வணங்கினாலும் தியாகங்கள் பரிந்தாலும் அது அல்லாஹ்விற்காகவா என்று பார்த்தால் அதுவுமில்லை. மாறாக பிறர் மதிக்க வேண்டும் மக்கள் போற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதிலே மேலோங்கி நிற்கிறதே தவிர மாண்பாளனான அல்லாஹ்வின் மனம் குளிர வேண்டும் அதனால் நாம் மணம் பெற வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் எழ மறுக்கிறது.
உலகை முற்றிலும் துறந்து விடு என்று மார்க்கம் கூற வில்லை மாறாக உலகம் எதுவரை உதவும் என்பதை உணர்ந்து நட என்றுதான் கூறுகிறது. அப்படி உணர்ந்து நடந்த நல்லோர்களைத்தான் நாம் உத்தமர்கள் இறைநேசர்கள் என்று கூறுகிறோம்.
அப்படிப் பட்ட மாந்தருள் மாணிக்கமாகத் திகழ்பவர்கள்தான் ராபியத்துல் பஸரிய்யா ரஹ்மதுல்லாஹ் அவர்களாகும். அன்னை ராபியத்துல் பஸரிய்யா அவர்களின் உலக நாட்கள் உதிர்ந்து போகும் இருதி நேரத்தில் இருக்கும் போது அவர்களைக்கான இறைநேசச் செல்வர்களான மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ரியாஹ் இப்னு கைஸ் ரஹ்மதுல்லாஹ் ஆகிய இரண்டு போரும் அன்னை அவர்களின் வீடு வந்து சேர்ந்தார்கள். ஸக்ராத்த ஹாலில் இருக்கும் அன்னையவர்களின் நிலை கண்டு மனம் வருத்தி அல்லாஹ்வின் நல் அடியாரே! தங்களுக்கு ஏதேனும் விருப்பம் உள்ளதா? என்று கேட்டார்கள்.
ஆம் உள்ளது என்று அன்னை பதில் சொல்ல அவர்கள் என்ன விருப்பம் என்று கேட்க எனது பாவங்கள் மண்ணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூற மீண்டும் இறைநேசர்கள் கேட்டார்கள் இந்த துன்யாவை விட்டுப் போவப்போகிற உங்களுக்கு இந்த துன்யா சம்பந்தப்பட்ட விருப்பம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டதும் ஆம் உண்டு.ருதபபெனும் பேரீத்தம் பழத்தை நான் முப்பது வருட காலமாக திண்ண நாடியும் அதனை எனது நப்ஸ_க்கு கொடுக்காமல் இருந்தேன் என்று கூறினார்கள்.
சகோதரியே இந்தக் காலம் பஸராவில் ருதபெனும் பேரீத்தம் பழம் கிடைக்காதே நான் என்ன செய்வேன் மரணவேளையில் உள்ள தங்களது ஹாஜத்தை என்னால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமே! என்று வருத்தியவர்களாக வெளியே பழம் தேடிப்போன போது ஒரு பறவையானது தனது அழகில் ருதபெனும் பழக்குழையை தூக்கிக் கொண்டு மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ்விடம் அருகில் வந்து போட்டு விட்டு பறந்து சென்றது.
அல்லாஹ் அக்பர் என்று இறைவனைப் புகழ்ந்தவர்களாக அந்தப்பழங்களைக் கொண்டு வந்து அன்னையிடம் கொடுத்த போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் கேட்டார்கள். இந்தப் பழங்கள் ஏது? எப்படிப் பெற்றீர்கள் ? என்று..
உடனே மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹ் கூறினார்கள் அம்மையே இந்தப் பழங்களை ஒரு பறவை கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றது நீங்கள் விரும்பி கேட்ட அந்தப் பழங்கள்தான் இது என்றார்கள். அநீதமான முறையிலே வாழும் தீயோரின் தோட்டத்துப் பழங்களாக இவை இருக்காது என்ன நிச்சயம்? ஆகவே இவைகள் எனக்கு வேண்டாம் எனக்கூறி ஒன்றினைக்கூட எடுக்காது தள்ளி வைத்து விட்டார்கள்.
30 வருட காலமாக திண்ண வேண்டும் என்று ஆசித்த ஒரு பொருள் தனக்கு முன் இருந்தும் தொட்டும் பார்க்கவில்லை. இந்நிலையில் அன்னை ராபிய்யா அவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களே! தாங்கள் இருவரும் சிறிது வெளியே செல்லுங்கள் எனது ரப்பை நான் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று கூறினார்கள். அழுத நிலையில் இறை நேசர்கள் இருவரும் வெளியே சென்றதும் சப்தம் உள்ளிருந்து கேட்டது அதாவது யாஅய்துஹன்னப்ஸ_ல் முத்மயின்னாஹ் துர்ஜியி இல ரப்பிகி ராலியத்தன் மர்லிய்யா என்ற ஆயத்தின் சப்தத்தை கேட்டார்கள். உடனே சென்று பார்த்த போது அன்னை அவர்கள் ஸஜ்தாவிலே தலையை வைத்த நிலையில் மரணமடைந்திருக்க கண்டோம் என்று கூறினார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்
Abu Izzah Zainab Eravur