சமூகத்தை வழி நடாத்தும் சிறந்த ஆலிமாக்களை உருவாக்குவோம ஈருலகில் வெற்றி பெறுவோம்

كلية مناضير الانوار العربية للسيدات

மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி

Thursday, November 8, 2018

சுவனத்துப் பேரரசி 14

 அன்னை_ஃபாத்திமா_ரலியல்லாஹூ_அன்ஹா அவர்கள் வாழ்க்கை வரலாறு...!!

பாகம் :14

ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபி ஸல்லல்லாஹூ அலைகி வஸல்லம்
அவர்கள்,,,

தனதருமை மகள் ஃபாத்திமா
ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வீட்டிற்கு பேரக் குழந்தைகளைக் காணச்
சென்றிருந்தார்கள்...!

இருவரும் இல்லை.
மகளிடம்
விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள்.

இன்னும் சிறிதுநேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

நீண்ட நேரமாகியும்
இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் பேரக் குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள்.

மதீனாவின் எந்த ஒரு
பகுதியிலும் இருவரையும் காண வில்லை.

மதீனாவிற்கு வெளியே
பாலைவனத்தை நோக்கி நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்கள்

ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம்
விசாரித்த வண்ணம் சென்றார்கள்.

ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்களின் ,,,

முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து
என்ன ஏது? என்று விசாரித்தார்.

 நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம்  அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.

அப்போது, நாயகமே!
கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும்
இருப்பார்கள்.

சற்று முன்னர் தான்
இங்கு அவர்களை நான் கண்டேன்”என்று கூறிய அவர் அல்லாஹ்வின்
தூதரே!

ஒரு விஷத்தை நான்
உங்களிடம் நான் சொல்லலாமா” என
வேண்டினார்.

நபி ஸல்லல்லாஹூஅலைகிவஸல்லம் அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார்,,,,

“அல்லாஹ்வின் தூதரே!
சற்று முன்னர் தான் இருவரும் இங்கே
வந்தனர்.,,,,

அவர்கள் முகத்தில் நான்
பசியின் ரேகை படர்ந்திருந்ததை
பார்த்து விட்டு,

என் ஆட்டிலிருந்து
பால் கறந்து தரவா? என்று இருவரிடமும் கேட்டேன்...!!

அப்போது,

அவர்கள் இருவரும்”நீங்கள் இந்த மந்தையின்
உரிமையாளரா?” என்று
கேட்டார்கள். நான் இல்லை என்றேன்...!!

அப்படியென்றால்,,,

உங்கள் உரிமையில்
இல்லாத இந்த மந்தையில் உள்ள
ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று
கூறி மறுத்து விட்டு,,,

அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த
தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர்.

நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள்  அவர்கள் அந்த தோட்டத்திற்கு வந்து பார்க்கின்றார்கள்.

அங்கே ஓர் மரத்தின்
நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்....!!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் இருவரையும் எழுப்பி,

வாரி அணைத்து முத்தமிட்டு
இருதோள்புஜங்களிலும்
இருவரையும் சுமந்தவர்களாக
தங்களது மகளார் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா
அவர்களின் வீட்டிற்கு வந்து,,,,

“ஃபாத்திமாவே!

உம் தந்தை
முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை
உருவாக்கியிருக்கின்றாய்!

என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்..

இன்ஷா அல்லாஹ்
தொடரும்....!!

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
Share:

0 comments:

Post a Comment

Total Pageviews