சமூகத்தை வழி நடாத்தும் சிறந்த ஆலிமாக்களை உருவாக்குவோம ஈருலகில் வெற்றி பெறுவோம்

كلية مناضير الانوار العربية للسيدات

மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி

Thursday, November 8, 2018

சுவனத்துப் பேரரசி 14

 அன்னை_ஃபாத்திமா_ரலியல்லாஹூ_அன்ஹா அவர்கள் வாழ்க்கை வரலாறு...!!

பாகம் :14

ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபி ஸல்லல்லாஹூ அலைகி வஸல்லம்
அவர்கள்,,,

தனதருமை மகள் ஃபாத்திமா
ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வீட்டிற்கு பேரக் குழந்தைகளைக் காணச்
சென்றிருந்தார்கள்...!

இருவரும் இல்லை.
மகளிடம்
விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள்.

இன்னும் சிறிதுநேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

நீண்ட நேரமாகியும்
இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் பேரக் குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள்.

மதீனாவின் எந்த ஒரு
பகுதியிலும் இருவரையும் காண வில்லை.

மதீனாவிற்கு வெளியே
பாலைவனத்தை நோக்கி நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்கள்

ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம்
விசாரித்த வண்ணம் சென்றார்கள்.

ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்களின் ,,,

முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து
என்ன ஏது? என்று விசாரித்தார்.

 நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம்  அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.

அப்போது, நாயகமே!
கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும்
இருப்பார்கள்.

சற்று முன்னர் தான்
இங்கு அவர்களை நான் கண்டேன்”என்று கூறிய அவர் அல்லாஹ்வின்
தூதரே!

ஒரு விஷத்தை நான்
உங்களிடம் நான் சொல்லலாமா” என
வேண்டினார்.

நபி ஸல்லல்லாஹூஅலைகிவஸல்லம் அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார்,,,,

“அல்லாஹ்வின் தூதரே!
சற்று முன்னர் தான் இருவரும் இங்கே
வந்தனர்.,,,,

அவர்கள் முகத்தில் நான்
பசியின் ரேகை படர்ந்திருந்ததை
பார்த்து விட்டு,

என் ஆட்டிலிருந்து
பால் கறந்து தரவா? என்று இருவரிடமும் கேட்டேன்...!!

அப்போது,

அவர்கள் இருவரும்”நீங்கள் இந்த மந்தையின்
உரிமையாளரா?” என்று
கேட்டார்கள். நான் இல்லை என்றேன்...!!

அப்படியென்றால்,,,

உங்கள் உரிமையில்
இல்லாத இந்த மந்தையில் உள்ள
ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று
கூறி மறுத்து விட்டு,,,

அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த
தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர்.

நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள்  அவர்கள் அந்த தோட்டத்திற்கு வந்து பார்க்கின்றார்கள்.

அங்கே ஓர் மரத்தின்
நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்....!!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் இருவரையும் எழுப்பி,

வாரி அணைத்து முத்தமிட்டு
இருதோள்புஜங்களிலும்
இருவரையும் சுமந்தவர்களாக
தங்களது மகளார் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா
அவர்களின் வீட்டிற்கு வந்து,,,,

“ஃபாத்திமாவே!

உம் தந்தை
முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை
உருவாக்கியிருக்கின்றாய்!

என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்..

இன்ஷா அல்லாஹ்
தொடரும்....!!

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
Share:

Wednesday, November 7, 2018

சுவனத்துப் பேரரசி பாத்திமா

சுவனத்துப் பேரரசி அன்னை பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வாழ்க்கை வரலாறு

ஒரு நாள் ஃபாத்திமா ரலியல்லாஹூ  அன்ஹா அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் கிடந்தார்கள்....!!!!

கணவர் செய்யதினா அலி ரலிரலியல்லாஹூ அன்ஹூ பக்கத்தில் இருந்து பணிவிடைகள் செய்தார்கள்...!!

அப்போது,,,

மனைவியை நோக்கி,
அன்பு மனைவியே,,,

தாங்களுக்கு பிடித்த மானதை கேளுங்கள் வாங்கி வருகிறேன் என்றார்கள்....!!!!

இதுவரை கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டிராத ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் ,,,,

இருமனதோடு சரி எனக்கு மாதுளம் பழம் சாப்பிட ஆசையாக உள்ளது என்றார்கள்....!!

சந்தோஷம் தாங்க முடியாமல் கடைத் தெரு நோக்கி புறப்பட்டார்கள்....!!

கடைத்தெருவில் மாதுளம் பழம் கிடைக்க வில்லை....!!!!

அடுத்துள்ள ஒரு ஊரில் தான் மாதுளம் பழம் கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்று ஒரு பழம் வாங்கி கொண்டு வீடு நோக்கி மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.

வழியில் ஒரு ஏழை மனிதர் அந்த சாலை ஓரத்தில் மயங்கி கிடந்தார்.

உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள்....!!!!

அப்போது அவர் தம்பி பணிவிடைக்கு நன்றி எனக்கு ஒரு ஆசை இருக்கு அதை பூர்த்தி செய்வீர்களா? என்றார்.

சரி சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் செய்கிறேன் என்றார்கள்....!

உடனே அவர் எனக்கு மாதுளம் பழம் சாப்பிட நீண்ட நாட்களாக ஆசையாக இருக்கிறது வாங்கி தருவீர்களா...,,,

என்றதும்,,,,

அதிர்ச்சி அடைந்த அலி ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்கள் திக்கு முக்காடிப் போனார்கள்....!!!!

இருப்பதோ ஒன்று அதை இதுவரை எதுவுமே வாங்கி கேட்டிராத மனைவிக்கா?

அல்லது,,,,,,

இந்த வழிப் போக்கருக்கா? என்ற போராட்டம் மனதில் ஒடியது..!!

முடிவில் இது அல்லாஹ்வின் சோதனை என்று அந்த முதியவருக்கே கொடுத்து விட்டார்கள்....!!!!

பின்பு சோர்வுடன் வீடு நோக்கி வந்தார்கள் நோயில் கிடந்த பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா மிக்க முகலர்ச்சியுடன் கணவரை வரவெற்றார்கள்...!!

வழியில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்கள்...!

அதற்கு பாத்திமா ரலியல்லாஹூ  அன்ஹா தாங்கள் செய்த தர்மத்தால்.,, அல்லாஹ் எனது நோயை குணமாக்கினான் என்றார்கள்....!!!

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.திறந்த போது சல்மான்பாரிசி
ரலியல்லாஹூ  அன்ஹூ  அவர்கள் நின்றார்கள்...!!

கையில் ஒரு சிறிய கூடை இருந்தது.இறக்கி வைத்து விட்டு இவைகளை இன்னார் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார், என்று கூடையை ஒப்படைத்தார்கள்....!!!!

கூடையில் மாதுளம் பழம் இருந்தது. அலி ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்கள்  பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா இருவரும் பெரும் ஆச்சரியம் அடைந்தார்கள்...!!

அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹவைப் புகழ்ந்தார்கள்....!!!!

உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ  கூடையில் இருந்த மாதுளம் பழ்ங்களை எண்ணினார்கள்...!!

அதில் 9-மாதுளம் பழங்கள் தான் இருந்தன. உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்கள்,,, ஸல்மான் பாரிசி(ரலிரலியல்லாஹூ  அன்ஹூ) அவர்களே, வீடு மாறி கொண்டு வந்து விட்டீர்கள் இது எங்களுக்குரியது அல்ல.,,, என்றார்கள்...!!

உங்களுக்காகத்தான் உங்களுக்கே உரியது தான் என்றார்கள்....!!!!

அதற்கு அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அல்லாஹ் குர் ஆனில் "மனிஜாஅ பில் ஹஸனத்தி அஸரத்தி அம்சாலிஹா" ஒரு நன்மை
செய்தால் அதற்கு அதுபோல 10 வழங்குவோம், என்று அல்லாஹ் சொல்கிறான்...!!!!

சற்று முன்நான் ஒரு மாதுளம் பழம் தர்மம் செய்தேன் ஒன்றுக்கு பத்து அல்லவா,,, வந்திருக்க வேண்டும்..?

கூடையில் 9 பழங்கள் தானே உள்ளது என்று விள்க்கமளித்தார்கள்.

இதைக் கேட்ட ஸல்மான் பாரிசி(ரலியல்லாஹூ ) அவர்கள் சட்டையில் மறைத்து வைத்துள்ள ஒரு மாதுளம் பழத்தை வெளியே எடுத்து கூடையில் போட்டார்கள்....!!!!

அலியே! உங்களை சோதிப்பதற்காகத்தான் வழியில் ஒரு பழத்தை எடுத்து மறைத்தேன் என்றார்கள்....!!

பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது,...!!

அல்லாஹ்வின் உதவியை நினைத்து மகிழ்ந்தார்கள்....!!!!

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

இன்ஷா அல்லாஹ்
தொடரும்......!!
மாபிர்
ஸித்றத்துல் முன்தஹா
Share:

Tuesday, November 6, 2018

நாயகத்தின் மீது நேசம் வைப்போம்

நாயகத்தின் மீது நாயகனின் நேசம். நாமும் வைத்திடுவோம்
மீலாது கொண்டாடிடுவோம் வாரீர் வாரீர்..
الصلاة والسلام عليك يا سيدي يا رسول ألله
 ஆணவத்தை கழட்டி வைப்போம் நானென்ற மமதையை குழிதோண்டி  புதைத்து வைப்போம். மாநபியின் மாண்புதனை மனமாற புகழ்ந்திடுவோம்   வாரீர் வாரீர்....

கரைபடிந்த உள்ளத்தினை கவிநாயகரின் புகழ் மழையில் கழுவிடுவோம்     வாரீர் வாரீர்....

பண்பு நபியின் மாண்புதனை அறிந்திடுவீராயின் அறுத்துடுவீர் அடுத்தகணமே உம்மை அரசாட்ச்சி கொள்ளும் உம் அம்மாரா  நப்ஸுதனை
அறுத்திடுவோம்    வாரீர் வாரீர்....

மூடர்களின் வாக்குதனில் தனை  மாய்த்துக்கொண்ட மானிடரே!... 
மானிடருக்காக மாரிடம் வென்று  மனித ரூபம் கொண்டு மண்ணுலகம் வந்துதித்த மாமனிதரை போற்றிடுவோம்    வாரீர் வாரீர்.....

கபுரதுவோ நம் காலடியில் நினைக்கையிலே கழங்கிடுதே.. மறுமையதோ நொடிப்பொழுதில் திடுக்கிடுதே கனப்பொழுதில்  உலகத்தின் சிற்றின்பம்
வந்திடுமோ நமைக்காக்க??
காணல் நீராகிப் போகிடுமே...

"கழங்கிடும் நெஞ்சினிலே அமைதி தரும் அன்பு நபியை மன மாற அன்பு வைத்திடுவோம்"..       வாரீர் வாரீர்.....

ஈருலகை வென்றிடலாம் மாநபியின் நேசத்தினால்.. மாமறையே பரைசாற்றிடுதே..

வல்லோன் இறையோன்
ஈருலகின் நாயகராம் எம்  மாகராஸரை நேசம் கொண்ட மான்பதனை...
(நவினிக்க எம்மாநபியை (யாநபியே!!)) என்று கல்பினிக்க அழைக்கின்றான் எம்மிறைவன்.. 
நாமும் எம் கல்பினிக்க  அழைத்திடுவோம், புகழ்திடுவோம்.. மீலாது கொண்டாடிடுவோம்
வாரீர் வாரீர்......

يا نبي سلام عليكم
يا رسول سلام عليكم
يا حبيب سلام عليكم
صلوات ألله عليكم 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 
ஆலிமா ஏ.ஆர் அஸ்மியா நூரிய்யாஹ்  மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி ஏறாவூர்.
Share:

Sunday, November 4, 2018

கண்மணி சஹாபாக்கள் கறையில்லா முத்துக்கள்


                                                  *நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள்* 

காரூண்யராம் நம் நபியின் 
கல்பிலே குடி கொண்ட 
கண்மணி சஹாபாக்கள்
கறையில்லா முத்துக்கள்!

அன்னலை அடி யொற்றி, 
அவர் சொன்னதை செயல்படுத்தி,
மன்னிலே மறையொளி சுமந்து,
மனிதப் புனிதராய்மிளிர்ந்தோர்!

நிழல் இல்லா நபியின் நிழலாய் நின்று,
நிகரில்லா அன்பு அவர்மேல் கொண்டு, 
அன்னவருக்காய் தம் இன்னுயிரை ஈந்து,
சுவனப் பூங்காவின் சொந்தமானார்கள்!

ஒளியிடம் ஒளி வாங்கி ஒளிரும் ஒளிச்சுடர்கள்!
 உயர் தீனை தாங்கி நிற்கும்
தன்னிகரில்லா தியாகத் தூண்களே சஹாபாக்கள்!!
  
  ✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யா*
Share:

ஒரு பெண்ணுக்கு வெட்கம்

ஒரு பெண்ணுக்கு வெட்கம்  இருக்குமானால் அவளது ஆடையில் ஒழுக்கம் இருக்கும்...
ஓர் ஆணுக்கு ஒழுக்கம் இருக்குமானால்  அவனது பார்வையில் கண்ணியம் இருக்கும்...
ஆனால், இன்று பெண்களின் ஆடையில் ஒழுக்கமும் இல்லை... ஆண்களின் பார்வையில் கண்ணியமும் இல்லை...

மாற்றம் தேவை...

எப்போது பெண்களின் ஆடையில் கவர்ச்சியும் அலங்காரங்களும் குறைக்கப்படுமோ அப்போதுதான் அவர்கள் மீதான ஆண்களின் பார்வை கண்ணியமானதாக மாறும்...

மாற்றம் தேவை...

கவர்ச்சியாக உடை அணிந்திருக்கும் பெண்களைக் கண்டால் ஆண்கள் எல்லோரும் ஆசைப்படத்தான் செய்வார்கள் என்பது கசப்பான ஒரு வழமையாகி விட்டது நம் சமூகத்தில்... அவ்வாறு ஆசைப்படும் ஆண்கள் ஒன்றை நினைக்க வேண்டும் தன்னுடைய சகோதரியையோ இல்லை தாயையோ இல்லை மனைவியையோ யாராவது இப்படி தவறாகப் பார்க்கும்போது தனது உள்ளம் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் ஏனெனில்,நீஙகள் தவறாக பார்க்கும் அந்த பெண்களும் யாரோ ஒருவரின் தாய்தான்...சகோதரிதான்...மனைவிதான்...மகள்தான்

மாற்றம் தேவை...

பெண் என்றால் ஆண்களின் ஆசைக்கு மட்டும்தான் என்று எண்ணாதீர்கள்...பெண் என்பவள் விவரிக்க முடியாத கவிதை...விடை காண முடியாத கேள்வி...அனைத்தையும் தாண்டி பெண் என்பவள் பலமான ஒரு பலவீனம்...அவளுடைய பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்....

வாழ்க்கை அவளை ஏதாவதொரு தருணத்தில் ஒரு உன்னதமான தியாகியாக மாற்றியே விடுகின்றது.

தாயாக அவளின் தியாகம் சொல்லிலடங்காது...
மனைவியாக அவளின் தியாகம் எல்லையில்லாதது...
பெண்மை என்றாலே தியாகம்தானே...

உன் தாயும் ஒரு பெண்தான்...
உன் சகோதரியும் ஒரு பெண்தான்...
உன் மனைவியும் ஒரு பெண்தான்...
உன் மகளும் ஒரு பெண்தான்...

தவறாக பார்ப்பது ஆண்களின் தவறு...
அதே போல் தவறாக பாரக்க தூண்டுவது பெண்களின் தவறு...

திருந்துவோம்...திருத்துவோம்...
மாற்றம் ஒவ்வொருவரதும் மனதில் எழ வேண்டும்...

                                                                               படித்ததில் பிடித்தது
Share:

Monday, October 29, 2018

ஏந்தல் நபி தாஹாவே

ladies arabic college

*ஏந்தல் நபி தாஹாவே*
என் கவியின் நாயகரே
ஏந்தல் நபி தாஹாவே
உம் புகழை நினைக்கயிலே
இனிக்கிறது என் இதய நதி!
முஹம்மதென்ற முத்துக்குள்
என் சிந்தையை சிறைபடுத்தி
புகழ் மாலை புனைகயிலே
இனிக்கிறது என் இதய நதி!
கண்ணுக்குள் கரு மணியாகி
கல்புக்குள் கலந்து உடலுக்குள் 
உயிராய் உறைந்திருக்கும் உத்தமரே!
இனிக்கிறதே என் இதய நதி!
கணப்பொழுதேனும் கண்டிட ஏங்குகிறேன் 
கனவிலேனும் காட்சி தாரீர் கருனை நபியே யாரஸூலே
விழிகள் தேடும் விடியலே!
✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யாஹ்*
 Manaleerul Anwar ladies arabic college Eravur Srilanka

ஏந்தல் நபி தாஹாவே

Share:

Friday, October 26, 2018

நபிகளாரின் மீது அன்பு கொள்பவர்களின் நிலை......!!!!

ladies arabic college


அவசியம் படிக்க வேண்டிய ஒரு சரித்திரம் 
ஜுலைபீப் رضي الله عنهم.   ஹதீஸ் வரலாறுகளில் ஒரு நபித்தோழரைப்  பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜுலைபீப்  رضي الله عنهم அவர்கள்...

* உயரம் குறைவானவர்
* நேர்த்தியில்லாத உருவம்
* பரம்பரை சரித்திரம் இல்லாதவர்
* அவருடைய பெற்றோகள் பற்றிய எந்த தகவலும் இல்லை
* எந்த குலத்தவரும் சொந்தம் கொண்டாடப் படாதவர்
* அவர் ஒரு தனிமரமாக காணப்பட்டார். மதீனாவின் குழந்தைகளும் அவரைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்யும் நிலையில் இருந்தார்.
* எவரும் அவரை தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்பாத, நட்பு பாராட்டாத ஒரு நிலை.

பல நாட்கள் மதீனாவின் வீதிகளில் தன் நிலையை எண்ணி அழுதவண்ணம், தனிமையில் காலம் கடந்தது.

கண்மணி நாயகம் முகம்மதும் முஸ்தபா ﷺ அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்பாக ஜுலைபீப் رضي الله عنهم அவர்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

அவர் நபிகளார் ﷺ அவர்களின் கூட்டத்தில் இருப்பார், அவர்களை செவுயுருவார். மிக குறைவாக பேசுவார். வெக்கத்தால் தலை குனிந்தவாறே இருப்பார்.

இப்போது இவர் நபிகளார் ﷺ; அவர்களின் தோழராய் ஆகிவிட்டார்.

ஒரு நாள் தோழர்களுடன் இருக்கும் நேரத்தில் நபிகளார் ﷺ அவரிடம் கேட்டார்கள்: ஓ ஜுலைபீப் رضي الله عنهم என்னிடம் நீ ஏதாவது கேள், உனக்கு விருப்பமான ஏதாவது உள்ளதா என்பதாக.

அவர் வெட்கம் கலந்த குரலில் கூறினார்,
ஓ அல்லாஹ்வின் தூதர் ﷺ, அவர்களே, எல்லாம் அல்ல அல்லாஹ் உங்களுடன் இருக்கும் பாக்கியத்தை தந்துள்ளானே. இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் என்பதாக.

நபிகளார் ﷺ கேட்டார்கள்: எனதருமை நண்பரே நீர் திருமணம் செய்ய ஆசைப் படுகிறீற என்பதாக. ஜுலைபீப் رضي الله عنهم அவர்களோ புன்னகைத்தார்கள், நம்மை யார் திருமணம் முடிக்க முன்வருவார்கள் என நினைத்தவாறு.

இருப்பினும், பதில் கூறினார். ஆம், அல்லாஹ்வின் தூதரே ﷺ என்பதாக.

நபிகளார் ﷺ அவர்கள் மதீனாவில் புகழ் பெற்ற ஒரு அன்சார் சஹாபியின் வீட்டுக்குச் சென்றார்கள். சென்று கூறினார்கள், நான் உங்களது மகளை பெண் கேட்டு வந்துள்ளேன் என்பதாக.

அந்த சஹாபியோ, யா ரசூல் ﷺ அவர்களே இதை விட சிறந்த பாக்கியம் எங்களுக்கு வேறு என்ன இருக்க முடியும் என்பதாக.

நபிகளார் ﷺ கூறினார்கள்: நான் எனக்காக கேட்கவில்லை. எனது நண்பர் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்காக என்றார்கள்.

அந்த சஹாபியோ மிக நொந்தவராக, ஜூலைபீப் رضي الله عنهم அவருக்காக என்றார்கள். நபிகளார் ﷺ ஆம் என கூறினார்கள்.

சஹாபி கூறினார், நான் எனது மனைவிடம் கலந்தாலோசனை செய்து வருகிறேன் என்பதாக. செய்தியைக் கேட்ட மனைவியோ, அழுகையும், ஒப்பாரியுமாக. நான் ஜுலைபீப் رضي الله عنهم அவரைத் தவிர எவருக்கு வேண்டுமானாலும் எனது மகளை மணமுடித்து குடுப்பேன் என்பதாக.

இவர்களின் உரையாடலைக் கேட்ட மகள் விபரம் கேட்டார் தனது பெற்றோரிடம். அந்த பெண்ணோ மதீனாவின் மிக சிறந்த அழகியாக போற்றப் பட்டவர். சிறந்த பயபக்தி உடைய அந்த பெண்மணி சதா வணக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவர் கூறினார் தனது தாயிடம், எனது அருமை தாயே, எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நபிகளாரின் ﷺ. கோரிக்கையை நிராகரிக்கப் போகிறீர்களா என்பதாக. மேலும், கூறினார் அந்த இளம் பெண், அல்லாஹ்வும், அவனது தூதர் ﷺ அவர்களும் ஒரு காரியத்தை முடிவு செய்ய, அதில் மாற்றுக் கருத்து சொல்ல எந்த இறை நம்பிக்கையாளருக்கும் உரிமை இல்லை என்பதாக

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் நம்மை இழிவு படுத்துவார் என நீங்கள் என்னுகிரீர்களா?
எவ்வளவு பெரிய சிறந்த நிலை ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு, அல்லாஹ்வின் தூதரே  ﷺ உங்களின் மகளை பெண் கேட்டு வந்துள்ளார்கள். உங்களுக்கு தெரியாதா, மலக்குகளும் பொறாமைக் கொள்கின்றனர் அல்லாஹ்வின் தூதரிடம் ﷺ நெருக்கம் கொண்டவர்களைப் பார்த்து.

கூறுங்கள் நபிகளார் ﷺ அந்த சஹாபியை இங்கு அனுப்புவதற்கு. இதை விட சிறந்த பாக்கியம் வேறொன்றுமில்லை, இதை விட சிறந்த கணவர் வேறு எவரும் எனக்கு இருக்க முடியாது என்றார். மேலும் கூறினார் தாயிடம், நபிகளார் ﷺ சிறந்த பரிசுடன் நமது வீடு தேடி வர, நீங்களோ அழுதுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாக.

அடுத்த நாளே திருமணம் நடந்தது.
உத்மான்  رضي الله عنهم மற்றும் அலி رضي الله عنهم அவர்கள் பரிசளித்தனர் பணக்குவியலை திருமண வலிமா மற்றும் தங்க வீடு வாங்குவதற்கும்.

குறுகிய காலத்தில் ஒரு போருக்கான அறிவிப்பு. மாமனார் கூறினார், மருமகனே நீங்களோ புதிதாய் திருமணம் ஆனவர். உங்களுக்கு இப்போது போர் கண்டிப்பு அல்ல, நீங்கள் உங்கள் மனைவியுடன் நேரத்தை சந்தோசமாக களியுங்கள் என்பதாக.

ஜூலைபீப் رضي الله عنهم, பல வருடங்கள் கழித்து திருமணம் புரிந்தவர். கூறினார்கள், மாமனாரிடம், உங்களுக்கு இது விசித்திரமாக இல்லையா. நமது தூதர் ﷺ  அவர்களோ போர் முனையில், என்னால் எப்படி வீட்டில் எனது மனைவியுடன் சந்தோசமாக இருக்க முடியும் என்பதாக.

சின்ன உருவமான ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் கிட்டத்தட்ட அவரது உயரத்தில் வாழ் ஒன்றை ஏந்தியவராக போர்க்களம் நோக்கி சென்றார். மற்ற சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர், எப்போதும் அமைதியாக, வெட்கம் கொண்டவராய் காணப்படும் ஜுலைபீப்  رضي الله عنهم அவர்கள் இப்போது ஒரு சிங்கம் போல களத்தில் செல்கிறாரே என்பதைக் கண்டு.
போர்க் களத்தில் பாய்ந்து சென்று எதிரிகளை துவசம் செய்ய ஆரம்பித்தார்.

போர் முடிந்த பின்பாக நபிகளார் ﷺ கூறினார்கள் மற்ற சஹாபாக்களிடம் சென்று பாருங்கள் எவராவது தங்கள் குடும்பத்தில் திருபவில்லையா என்பதை அறிந்து வாருங்கள் என்பதாக. பதில் கிடைக்கப் பெற்றார்கள், இல்லை எல்லோரும் திரும்பி விட்டனர் என்பதாக. அப்போது நபிகளார் ﷺ அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள், "நான் எனது அருமை ஜுலைபீப்  رضي الله عنهم  அவர்களை இழந்து விட்டேன். அவரை சென்று பாருங்கள் என்பதாக.".

அங்கு கண்டனர் சஹாபாக்கள், ஏழு காபிர்களைக் கொன்று, அவரும் அங்கு சஹீதாக்கப் பட்டதை.

நபிகளார் ﷺ குழி தோண்டச் சொன்னார்கள். நபிகளார் ﷺ அவரின் உடலை ஏந்தியவண்ணம் கூறினார்கள், "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து" என்பதாக 3 முறைக் கூறினார்கள். மற்ற சஹாபாக்கள் கூறினார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு எவ்வளவு பெரிய சிறப்பை கொடுத்துள்ளான் என்பதாக.

சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர் அவரின் வாழ்க்கையை பார்த்து. அவர் அல்லாஹ்வையும், நபிகளார் ﷺ அவர்களையும் அதிகம் விரும்பினார் இதோ மிக சிறந்த நிலையை அவர் அடைந்து விட்டார். அவர் பார்க்க அழகாய் இல்லை, ஆனால் மிக அழகிய மனைவியை அல்லாஹ் கொடுத்தான். மிக ஏழை, ஆனாலும் மிக பணக்கார பெண்ணை கரம் பிடித்தார். சிறந்த பெண்மணி, பயபக்தி உடையவர், சிறந்த குலத்திலிருந்து மனைவி கிடைக்கப் பெற்றார்.

நபிகளார் ﷺ அவர்களும் கூறினார்கள்  "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து".

மேலும் கூறப்பட்டது, அவரது தியாக மரணத்தால், அவரது ஜனாஸாவில் கலந்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மலக்குகள் வானத்தில் குவிந்துள்ளனர் என்பதாக. சுப்ஹானல்லாஹ்.

ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் தனிமையில் இருந்தார், எப்போது அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அன்புக்குரியவர் ஆனாரோ, அதுமுதல் அவர் தனி மனிதர் அல்ல.

இதுதான் நபிகளாரின் ﷺ மீது அன்பு கொள்பவர்களின் நிலை.

இன்ஷா அல்லாஹ்,

நாமும் நமது மனதில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் ﷺ அவர்கள் மீதும் அதிகம் அன்பு வைத்து, அவர்கள் வழி வாழ்ந்து மறுமையில் அவர்கள் நட்பு கிடைக்கப் பெற்றவர்கள் ஆவோமாக.

Abu Izzah

ladies arabic college

Share:

Total Pageviews