சமூகத்தை வழி நடாத்தும் சிறந்த ஆலிமாக்களை உருவாக்குவோம ஈருலகில் வெற்றி பெறுவோம்

كلية مناضير الانوار العربية للسيدات

மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி

Sunday, November 4, 2018

கண்மணி சஹாபாக்கள் கறையில்லா முத்துக்கள்


                                                  *நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள்* 

காரூண்யராம் நம் நபியின் 
கல்பிலே குடி கொண்ட 
கண்மணி சஹாபாக்கள்
கறையில்லா முத்துக்கள்!

அன்னலை அடி யொற்றி, 
அவர் சொன்னதை செயல்படுத்தி,
மன்னிலே மறையொளி சுமந்து,
மனிதப் புனிதராய்மிளிர்ந்தோர்!

நிழல் இல்லா நபியின் நிழலாய் நின்று,
நிகரில்லா அன்பு அவர்மேல் கொண்டு, 
அன்னவருக்காய் தம் இன்னுயிரை ஈந்து,
சுவனப் பூங்காவின் சொந்தமானார்கள்!

ஒளியிடம் ஒளி வாங்கி ஒளிரும் ஒளிச்சுடர்கள்!
 உயர் தீனை தாங்கி நிற்கும்
தன்னிகரில்லா தியாகத் தூண்களே சஹாபாக்கள்!!
  
  ✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யா*
Share:

ஒரு பெண்ணுக்கு வெட்கம்

ஒரு பெண்ணுக்கு வெட்கம்  இருக்குமானால் அவளது ஆடையில் ஒழுக்கம் இருக்கும்...
ஓர் ஆணுக்கு ஒழுக்கம் இருக்குமானால்  அவனது பார்வையில் கண்ணியம் இருக்கும்...
ஆனால், இன்று பெண்களின் ஆடையில் ஒழுக்கமும் இல்லை... ஆண்களின் பார்வையில் கண்ணியமும் இல்லை...

மாற்றம் தேவை...

எப்போது பெண்களின் ஆடையில் கவர்ச்சியும் அலங்காரங்களும் குறைக்கப்படுமோ அப்போதுதான் அவர்கள் மீதான ஆண்களின் பார்வை கண்ணியமானதாக மாறும்...

மாற்றம் தேவை...

கவர்ச்சியாக உடை அணிந்திருக்கும் பெண்களைக் கண்டால் ஆண்கள் எல்லோரும் ஆசைப்படத்தான் செய்வார்கள் என்பது கசப்பான ஒரு வழமையாகி விட்டது நம் சமூகத்தில்... அவ்வாறு ஆசைப்படும் ஆண்கள் ஒன்றை நினைக்க வேண்டும் தன்னுடைய சகோதரியையோ இல்லை தாயையோ இல்லை மனைவியையோ யாராவது இப்படி தவறாகப் பார்க்கும்போது தனது உள்ளம் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் ஏனெனில்,நீஙகள் தவறாக பார்க்கும் அந்த பெண்களும் யாரோ ஒருவரின் தாய்தான்...சகோதரிதான்...மனைவிதான்...மகள்தான்

மாற்றம் தேவை...

பெண் என்றால் ஆண்களின் ஆசைக்கு மட்டும்தான் என்று எண்ணாதீர்கள்...பெண் என்பவள் விவரிக்க முடியாத கவிதை...விடை காண முடியாத கேள்வி...அனைத்தையும் தாண்டி பெண் என்பவள் பலமான ஒரு பலவீனம்...அவளுடைய பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்....

வாழ்க்கை அவளை ஏதாவதொரு தருணத்தில் ஒரு உன்னதமான தியாகியாக மாற்றியே விடுகின்றது.

தாயாக அவளின் தியாகம் சொல்லிலடங்காது...
மனைவியாக அவளின் தியாகம் எல்லையில்லாதது...
பெண்மை என்றாலே தியாகம்தானே...

உன் தாயும் ஒரு பெண்தான்...
உன் சகோதரியும் ஒரு பெண்தான்...
உன் மனைவியும் ஒரு பெண்தான்...
உன் மகளும் ஒரு பெண்தான்...

தவறாக பார்ப்பது ஆண்களின் தவறு...
அதே போல் தவறாக பாரக்க தூண்டுவது பெண்களின் தவறு...

திருந்துவோம்...திருத்துவோம்...
மாற்றம் ஒவ்வொருவரதும் மனதில் எழ வேண்டும்...

                                                                               படித்ததில் பிடித்தது
Share:

Monday, October 29, 2018

ஏந்தல் நபி தாஹாவே

ladies arabic college

*ஏந்தல் நபி தாஹாவே*
என் கவியின் நாயகரே
ஏந்தல் நபி தாஹாவே
உம் புகழை நினைக்கயிலே
இனிக்கிறது என் இதய நதி!
முஹம்மதென்ற முத்துக்குள்
என் சிந்தையை சிறைபடுத்தி
புகழ் மாலை புனைகயிலே
இனிக்கிறது என் இதய நதி!
கண்ணுக்குள் கரு மணியாகி
கல்புக்குள் கலந்து உடலுக்குள் 
உயிராய் உறைந்திருக்கும் உத்தமரே!
இனிக்கிறதே என் இதய நதி!
கணப்பொழுதேனும் கண்டிட ஏங்குகிறேன் 
கனவிலேனும் காட்சி தாரீர் கருனை நபியே யாரஸூலே
விழிகள் தேடும் விடியலே!
✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யாஹ்*
 Manaleerul Anwar ladies arabic college Eravur Srilanka

ஏந்தல் நபி தாஹாவே

Share:

Friday, October 26, 2018

நபிகளாரின் மீது அன்பு கொள்பவர்களின் நிலை......!!!!

ladies arabic college


அவசியம் படிக்க வேண்டிய ஒரு சரித்திரம் 
ஜுலைபீப் رضي الله عنهم.   ஹதீஸ் வரலாறுகளில் ஒரு நபித்தோழரைப்  பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜுலைபீப்  رضي الله عنهم அவர்கள்...

* உயரம் குறைவானவர்
* நேர்த்தியில்லாத உருவம்
* பரம்பரை சரித்திரம் இல்லாதவர்
* அவருடைய பெற்றோகள் பற்றிய எந்த தகவலும் இல்லை
* எந்த குலத்தவரும் சொந்தம் கொண்டாடப் படாதவர்
* அவர் ஒரு தனிமரமாக காணப்பட்டார். மதீனாவின் குழந்தைகளும் அவரைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்யும் நிலையில் இருந்தார்.
* எவரும் அவரை தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்பாத, நட்பு பாராட்டாத ஒரு நிலை.

பல நாட்கள் மதீனாவின் வீதிகளில் தன் நிலையை எண்ணி அழுதவண்ணம், தனிமையில் காலம் கடந்தது.

கண்மணி நாயகம் முகம்மதும் முஸ்தபா ﷺ அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்பாக ஜுலைபீப் رضي الله عنهم அவர்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

அவர் நபிகளார் ﷺ அவர்களின் கூட்டத்தில் இருப்பார், அவர்களை செவுயுருவார். மிக குறைவாக பேசுவார். வெக்கத்தால் தலை குனிந்தவாறே இருப்பார்.

இப்போது இவர் நபிகளார் ﷺ; அவர்களின் தோழராய் ஆகிவிட்டார்.

ஒரு நாள் தோழர்களுடன் இருக்கும் நேரத்தில் நபிகளார் ﷺ அவரிடம் கேட்டார்கள்: ஓ ஜுலைபீப் رضي الله عنهم என்னிடம் நீ ஏதாவது கேள், உனக்கு விருப்பமான ஏதாவது உள்ளதா என்பதாக.

அவர் வெட்கம் கலந்த குரலில் கூறினார்,
ஓ அல்லாஹ்வின் தூதர் ﷺ, அவர்களே, எல்லாம் அல்ல அல்லாஹ் உங்களுடன் இருக்கும் பாக்கியத்தை தந்துள்ளானே. இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் என்பதாக.

நபிகளார் ﷺ கேட்டார்கள்: எனதருமை நண்பரே நீர் திருமணம் செய்ய ஆசைப் படுகிறீற என்பதாக. ஜுலைபீப் رضي الله عنهم அவர்களோ புன்னகைத்தார்கள், நம்மை யார் திருமணம் முடிக்க முன்வருவார்கள் என நினைத்தவாறு.

இருப்பினும், பதில் கூறினார். ஆம், அல்லாஹ்வின் தூதரே ﷺ என்பதாக.

நபிகளார் ﷺ அவர்கள் மதீனாவில் புகழ் பெற்ற ஒரு அன்சார் சஹாபியின் வீட்டுக்குச் சென்றார்கள். சென்று கூறினார்கள், நான் உங்களது மகளை பெண் கேட்டு வந்துள்ளேன் என்பதாக.

அந்த சஹாபியோ, யா ரசூல் ﷺ அவர்களே இதை விட சிறந்த பாக்கியம் எங்களுக்கு வேறு என்ன இருக்க முடியும் என்பதாக.

நபிகளார் ﷺ கூறினார்கள்: நான் எனக்காக கேட்கவில்லை. எனது நண்பர் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்காக என்றார்கள்.

அந்த சஹாபியோ மிக நொந்தவராக, ஜூலைபீப் رضي الله عنهم அவருக்காக என்றார்கள். நபிகளார் ﷺ ஆம் என கூறினார்கள்.

சஹாபி கூறினார், நான் எனது மனைவிடம் கலந்தாலோசனை செய்து வருகிறேன் என்பதாக. செய்தியைக் கேட்ட மனைவியோ, அழுகையும், ஒப்பாரியுமாக. நான் ஜுலைபீப் رضي الله عنهم அவரைத் தவிர எவருக்கு வேண்டுமானாலும் எனது மகளை மணமுடித்து குடுப்பேன் என்பதாக.

இவர்களின் உரையாடலைக் கேட்ட மகள் விபரம் கேட்டார் தனது பெற்றோரிடம். அந்த பெண்ணோ மதீனாவின் மிக சிறந்த அழகியாக போற்றப் பட்டவர். சிறந்த பயபக்தி உடைய அந்த பெண்மணி சதா வணக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவர் கூறினார் தனது தாயிடம், எனது அருமை தாயே, எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நபிகளாரின் ﷺ. கோரிக்கையை நிராகரிக்கப் போகிறீர்களா என்பதாக. மேலும், கூறினார் அந்த இளம் பெண், அல்லாஹ்வும், அவனது தூதர் ﷺ அவர்களும் ஒரு காரியத்தை முடிவு செய்ய, அதில் மாற்றுக் கருத்து சொல்ல எந்த இறை நம்பிக்கையாளருக்கும் உரிமை இல்லை என்பதாக

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் நம்மை இழிவு படுத்துவார் என நீங்கள் என்னுகிரீர்களா?
எவ்வளவு பெரிய சிறந்த நிலை ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு, அல்லாஹ்வின் தூதரே  ﷺ உங்களின் மகளை பெண் கேட்டு வந்துள்ளார்கள். உங்களுக்கு தெரியாதா, மலக்குகளும் பொறாமைக் கொள்கின்றனர் அல்லாஹ்வின் தூதரிடம் ﷺ நெருக்கம் கொண்டவர்களைப் பார்த்து.

கூறுங்கள் நபிகளார் ﷺ அந்த சஹாபியை இங்கு அனுப்புவதற்கு. இதை விட சிறந்த பாக்கியம் வேறொன்றுமில்லை, இதை விட சிறந்த கணவர் வேறு எவரும் எனக்கு இருக்க முடியாது என்றார். மேலும் கூறினார் தாயிடம், நபிகளார் ﷺ சிறந்த பரிசுடன் நமது வீடு தேடி வர, நீங்களோ அழுதுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாக.

அடுத்த நாளே திருமணம் நடந்தது.
உத்மான்  رضي الله عنهم மற்றும் அலி رضي الله عنهم அவர்கள் பரிசளித்தனர் பணக்குவியலை திருமண வலிமா மற்றும் தங்க வீடு வாங்குவதற்கும்.

குறுகிய காலத்தில் ஒரு போருக்கான அறிவிப்பு. மாமனார் கூறினார், மருமகனே நீங்களோ புதிதாய் திருமணம் ஆனவர். உங்களுக்கு இப்போது போர் கண்டிப்பு அல்ல, நீங்கள் உங்கள் மனைவியுடன் நேரத்தை சந்தோசமாக களியுங்கள் என்பதாக.

ஜூலைபீப் رضي الله عنهم, பல வருடங்கள் கழித்து திருமணம் புரிந்தவர். கூறினார்கள், மாமனாரிடம், உங்களுக்கு இது விசித்திரமாக இல்லையா. நமது தூதர் ﷺ  அவர்களோ போர் முனையில், என்னால் எப்படி வீட்டில் எனது மனைவியுடன் சந்தோசமாக இருக்க முடியும் என்பதாக.

சின்ன உருவமான ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் கிட்டத்தட்ட அவரது உயரத்தில் வாழ் ஒன்றை ஏந்தியவராக போர்க்களம் நோக்கி சென்றார். மற்ற சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர், எப்போதும் அமைதியாக, வெட்கம் கொண்டவராய் காணப்படும் ஜுலைபீப்  رضي الله عنهم அவர்கள் இப்போது ஒரு சிங்கம் போல களத்தில் செல்கிறாரே என்பதைக் கண்டு.
போர்க் களத்தில் பாய்ந்து சென்று எதிரிகளை துவசம் செய்ய ஆரம்பித்தார்.

போர் முடிந்த பின்பாக நபிகளார் ﷺ கூறினார்கள் மற்ற சஹாபாக்களிடம் சென்று பாருங்கள் எவராவது தங்கள் குடும்பத்தில் திருபவில்லையா என்பதை அறிந்து வாருங்கள் என்பதாக. பதில் கிடைக்கப் பெற்றார்கள், இல்லை எல்லோரும் திரும்பி விட்டனர் என்பதாக. அப்போது நபிகளார் ﷺ அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள், "நான் எனது அருமை ஜுலைபீப்  رضي الله عنهم  அவர்களை இழந்து விட்டேன். அவரை சென்று பாருங்கள் என்பதாக.".

அங்கு கண்டனர் சஹாபாக்கள், ஏழு காபிர்களைக் கொன்று, அவரும் அங்கு சஹீதாக்கப் பட்டதை.

நபிகளார் ﷺ குழி தோண்டச் சொன்னார்கள். நபிகளார் ﷺ அவரின் உடலை ஏந்தியவண்ணம் கூறினார்கள், "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து" என்பதாக 3 முறைக் கூறினார்கள். மற்ற சஹாபாக்கள் கூறினார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு எவ்வளவு பெரிய சிறப்பை கொடுத்துள்ளான் என்பதாக.

சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர் அவரின் வாழ்க்கையை பார்த்து. அவர் அல்லாஹ்வையும், நபிகளார் ﷺ அவர்களையும் அதிகம் விரும்பினார் இதோ மிக சிறந்த நிலையை அவர் அடைந்து விட்டார். அவர் பார்க்க அழகாய் இல்லை, ஆனால் மிக அழகிய மனைவியை அல்லாஹ் கொடுத்தான். மிக ஏழை, ஆனாலும் மிக பணக்கார பெண்ணை கரம் பிடித்தார். சிறந்த பெண்மணி, பயபக்தி உடையவர், சிறந்த குலத்திலிருந்து மனைவி கிடைக்கப் பெற்றார்.

நபிகளார் ﷺ அவர்களும் கூறினார்கள்  "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து".

மேலும் கூறப்பட்டது, அவரது தியாக மரணத்தால், அவரது ஜனாஸாவில் கலந்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மலக்குகள் வானத்தில் குவிந்துள்ளனர் என்பதாக. சுப்ஹானல்லாஹ்.

ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் தனிமையில் இருந்தார், எப்போது அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அன்புக்குரியவர் ஆனாரோ, அதுமுதல் அவர் தனி மனிதர் அல்ல.

இதுதான் நபிகளாரின் ﷺ மீது அன்பு கொள்பவர்களின் நிலை.

இன்ஷா அல்லாஹ்,

நாமும் நமது மனதில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் ﷺ அவர்கள் மீதும் அதிகம் அன்பு வைத்து, அவர்கள் வழி வாழ்ந்து மறுமையில் அவர்கள் நட்பு கிடைக்கப் பெற்றவர்கள் ஆவோமாக.

Abu Izzah

ladies arabic college

Share:

Wednesday, October 24, 2018

நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !

ladies arabic college


நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !

நீண்ட காலம் வாழ வேண்டும் எனறே ஒவ்வொரு மனிதனும் நினைக்கின்றான். சிறிய நோயாயினும் உடனே ஆஸ்பத்திரிகளும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் செல்கின்றான். நீ இன்று மரணித்து என்றால் அந்த வசனத்தை எவரும் ஜீரனிப்பதாக தெயவில்லை. 

தான் மரணித்து விடுவதில் ஆர்வம் கொள்ளும் மனிதனை உணர்வுகளாலும் உள்ளத்தினாலும் ஒரு போதும் உவந்து கொள்ள மாட்டான். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யும் ஒருவருக்காக எதைக் கொடுக்கவும் எதைச் செலவு செய்யவும் தயராக இருக்கின்றான். உங்களுடன் கஷ்ட்டப்படுவதை விட நான் மௌத்தாகி விடுவது மேல் என்று தனது மனைவி கோபத்தை வெளியிடும் போது கணவர் கருத்து கொடுக்காமல் இருந்துவிடுவது உண்டு. என்னைக் கஸ்டப்படுத்தாமல் நீங்கள் இறந்து போய் விடுங்கள் என மனைவி கூறினால் தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறும் கணவன்கள் இல்லாமல் இல்லை. எல்லாம் நீண்ட கால வாழ்கையின் ஆசைதான்.

உங்களின் முன்னால் நான் உலகை விட்டு பிரிந்து விட வேண்டும் எங்களுக்கு வேறு யாரு உதவ இருக்கிறார்? ஏன்று மனைவி பாசக்கதையை அடுக்குகின்ற போது கணவனுக்கு ஒரு படி சந்தோசமாயினும் நோய்வாய்ப்பட்டு நொந்துபோய் இறந்துவிடுவேனோ? என்று தனது நிலையை நினைத்து ..இல்லை இல்லை உங்களை விட நான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உபாயமான ஒரு வார்த்தையை உதிர்த்துவான். எல்லாம் நீண்ட காலம் வாழ்வதற்கு நினைத்ததுதான். இடைக்காலத்தில் இறந்து விட எவர்தான் துணிகிறார்கள்.? நீண்ட காலம் உலக வாழ்வில் நிம்மதியாக வாழவே மனசுகொண்டு அதற்கான ஆய்வுகளையும் சத்து மாத்திரைகளையும் உட்கொள்கிறார்கள்.

நீண்ட காலம் வாழ்வதற்கு நேச நபி நாயகம்  அவர்கள் சொன்ன அறிவுரைகள் என்ன என்பதை ஆராய்வோம். தனது வருவாயின் பெருக்கத்தையும் தனது ஆயுளின் நீளத்தையும் விரும்பும் ஒருவர் தனது உறவினர்களைத் தளுவி நடந்து கொள்வாராக என நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பர் அனஸ் ஆதாரம் புகாரி முஸ்லிம்) 

உரவினர்களை உபசரித்து நடக்கும் போது அவர்களின் பிரார்த்தனை நமக்கு உதவியாக அமைந்து விடுகிறது.குடும்பத்தினரின் பிரார்த்தனைகள் குவலயத்தில் நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகுக்கின்றது. உறவினறுடன் பகைத்துக் கொண்டு ஒதுங்கி வாழ்வதன் மூலம் யோசனை அதிகரிக்கிறது.இரத்த உறவுகளை துண்டிப்பதன் மூலம் யோசனை தலைக்கேறி இருதய வியாதி சர்க்கரை வியாதி அதிகரித்தல் போன்ற கஷ்டமான நோய்களுக்கு ஆளாகி விரைவாக உலகிலிருந்து விடை பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றான்.

இதனால்தான் இறைத்துதர் ﷺ அவர்கள் இரத்த உறவுகளுடன் பாசமாக இருக்க கருத்துப் பகர்ந்தார்கள்.உலகில் நீண்ட ஆயுளுக்கு எந்த வைத்தியரும் சொல்லாத மருந்தை மக்கத்து மாநபி அவர்கள் சொல்லியிருப்பது பெரும் பேறாகும்.

நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் ஒருவர் என்னிடத்தில் ஒரு செயலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளட்டும்.அவருக்கு நான் நான்கு விஷயங்களுக்குப் பொறுப்பேற்கிறேன்.அவர் தனது உறினரைத் தழுவி நடக்கட்டும்.அவரது ஆயள் நீளமாகும்.அவர் மீது உறவினர்கள் அன்பு செலுத்துவர்.அரன விஸ்தீரனம் ஏற்படும்.சுவர்க்கத்தில் நுழைந்திடுவார்.(கன்ஜூல் உம்மால்) எவன் தானம் செய்கிறானோ அவனுக்குத் தன்னாலேயே செல்வம் பெருகும்.( ஜேம்ஸ் ஸ்ரீபன்)

குடும்ப உறவினர்கள் பசி பட்டினியுடன் கஷ்டப்படும் போது அவர்களைக் கவனிப்பதன் மூலம் இரன விஸ்தீரனம் ஏட்படுகிறது. குடும்பத்தார்களின் அன்பு,பாசம் தன்னுடன் பிண்ணிப் பிணைந்திருக்கின்றது. எல்லாவற்றையும் விட சுவனம் செல்லும் வாய்ப்பு கிடைக்கின்றது. விட்டமின் வில்லைகளை உண்னுவதிலும் வெளிநாடுகளிருந்து தருவிக்கப்படுகின்ற பழச்சாறுகளையும்  அருந்தி ஆயட்காப்புறுதியில் சேர்ந்து நோய் வரும் போது பணம் பெறலாம் என்றெல்லாம் மேல் எண்ணம் வைத்து தானும் தனது மனைவி பிள்ளைகளும் வாழ வேண்டும் எனத்துடிப்பவர்கள் நீண்ட காலம் தனது ஆயுளை நீட்டவல்ல உறவினர் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் உயர்தர நடவடிக்கைகளை ஏன் யோசித்து செய்யக்கூடாது.

மறுமைநாளில் ரஹ்மானுடைய அர்சின் கீழ் மூன்று சாரார் நிற்பார்கள்.
1.உறவினர்களைத் தழுவி நடப்பவர் அவருக்கு இம்மையில் ஆயுளிலும் விருத்தி ஏற்படுவதுடன் வருவாயும் பெருகும். அவருக்கு கப்பிரிலும் இடவசதி ஏற்படும்.
2.கணவரை இழந்த விதவைப் பெண். அவள் தனது சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்க்க வேண்டும் கருத்தில் அவர்கள் வாலிப வயதை எய்முத் வரை மறுமணம் முடித்துக் கொள்ளதவள்
3. அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு சமைத்து விருந்து படைப்பவர்(அறிவிப்பர் அனஸ் ரழி) 

திருமணம் மடித்ததும் சிலர் உறவினர்களை அறவே மறந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு கிட்டியதும் உறவினர்களை விசாரிப்பதை விட்டு விடுகின்றனர். கடிதம் எழுதி களைத்துப் போன உறவினர்களும் போன் பண்ணி போதுமாகிப் போன குடும்பத்தினரும் ஆயிரம் ஆயிரம் இருக்கத்தான் செய்கின்றார்கள். வீடுääகல்வி குடர்காரியம் இவற்றுக்கொள்ளாம் உறவினர்களிடம் பணம் கேட்டு ஒரு பதிலுமில்லாது ஒதுங்கி வாழ்பவர்கள் அநேகம் அநேகம். ஒரு கவிஞர் பாடினார் “சொந்தங்கள் சொல்லத்தானே வெட்கங்கள்ääசோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்” இப்பாடல் சிலரின் வாழ்வில் அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்துன்றது. குடும்பங்களைப் பேனுவோம்.கோமான் நபி கூறியது போல் வாழ்வோம். 

Nafeesathuth Thahira ( Nooriyyah )

Ladies arabic college




ladies arabic college

ladies arabic college







Share:

Tuesday, October 23, 2018

மாணவிகளுக்கான ஷரீஆ கற்கை நெறி


ஏறாவூர் மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியில்  O/L, A/L படித்த மாணவிகளுக்கு மாத்திரம் 3 மாதம் ஷரீஆ கற்கை நெறியினை அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் மிகச் சிறப்பாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00  மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும்.

இன்ஷா அல்லாஹ் வாராந்தம் தொடர்ச்சியாக நடை பெறும் இக்கற்கை நெறிகளில் அனைத்து மாணவிகளும் கலந்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.

குறிப்பு :       இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு                          இறுதியில்   அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க  
                                              சான்றிதல் வழங்கப்படும்.




               கல்லூ}ரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவி 
                     யு.எல்  நவாஸ் உஸ்மானி  : 778492721
           கல்லூரியின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவி 
                     எச்.எம்.எம் யூசுப் முஸ்தபி : 0756212102
மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்



Share:

Thursday, October 18, 2018

கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம் !

Eravur lac.com

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம் !

அறிவு ஞானம் காணாமல் போன ஒரு சொத்தாகும் என கருணை நபி  அவர்கள் கூறினார்கள். அறிவினை தேடிப் படிப்பது ஆண்,பெண் இருபாலாருக்கும் கட்டாயக் கடமையாகும் என இன்னுமொரு ஹதீஸை இறைத்தூதர் அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நாம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.முந்திய காலங்களில் பெண்கள் கடிதம் எழுத,கையப்பம் போடத் தெரிந்து கொண்டால் போதும் பெரிய அளவில் படிக்கத் தேவையில்லை என ஒரு காலம் இருக்கத்தான் செய்தது.

இன்று அந்த அமைப்புக்கள் மாறி பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் வேரூண்டியிருக்கிறது. சின்ன வயதிலே ஆண் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவதும்ääபெண் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புவதும் தற்போது தற்போது முற்றாக குறைந்து விட்டது. சிறுவர் பராமரிப்பு அமைப்புகளும்,சட்டங்களும் இம்மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று கூடக் கூறலாம்.

இன்னும் 2 மாதத்தில் புதிய ஆண்டில் பிரவேசிக்கப் போகின்றோம். அது கல்வி ஆண்டு.சிந்தனையாண்டு,இன்டநெட் யுகமஇப்படி அடுக்கிக் கொண்டு போகலாம்.  இந்த யுகத்தில் வாழப் போகும் நாம் மடத்தணங்களுக்கு மடியமைத்துக் கொடுக்காமல் கல்விக்கு ஏணியமைத்துக் கொடுக்க எம்மை நாம் மாற்ற வேண்டும்.

படசாலை பிள்ளைகளின் நன்மை கருதி பெற்றோர்கள் அழைக்கப்படும் போது கண்டிப்பாக பெற்றோர் சமூகம் கொடுக்க வேண்டும் . ஆசிரியர்களுக்கிடையில் இறுக்கமான பிணைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி வளர்ச்சியில் கால் ஊன்ற முடியும்.


நாயகம்  அவர்கள் கூறினார்கள் “நீ ஒரு அறிஞனாக இரு இல்லையேல் மாணவனாக இரு இல்லையேல் கல்விக்கு உதவுபவனாக இரு நான்காம் நபராக இராதே! என்று சொன்னார்கள்.

எப்போதும் தாகமுடையவர்களாக இருக்க வேண்டும்.கல்விக்கு முக்கியத்துவம் வழங்காமல் தனது போக்கில் போய்க் கொண்டிருப்பவர்களையும் அன்றாட வாழ்வில் சந்திக்கவே செய்கின்றோம். அவர்களைப்பற்றி சிந்திக்கவும் செய்கின்றோம்.
கல்விப்புத்துணர்ச்சி எல்லா மட்டங்களில் இருந்தும் ஊக்கமளிக்கப்பட வேண்டும். குறிப்பாக குத்பா மின்பர்கள் கல்வி வளர்ச்சிக்காக நிறைய நிறையப் பயன்படுத்தப் பட வேண்டும்.

பாடசாலைகளில் பிள்ளை படிக்கிறார்கள் என்ற உணர்வுடன் மட்டும் இருக்காது எப்படிப் படிக்கிறார்கள், எதனைப் படிக்கிறார்கள் அவர்களது குறிப்புப் புத்தகங்கள் எப்படியிருக்கிறது வீட்டு அப்பியாசங்களைச் சரிவரசந் செய்கின்றார்களா? என்பதை நாமும் பார்வையிடுவதுடன்,ஆசிரியர்களிடமும் வினவிப் பார்க்க வேண்டும்.

கல்விச் சுற்றலா,கல்விக் கண்காட்சி போன்றவற்றிற்கு நமது பிள்ளைகளை அனுப்புவதற்குக் கூட தயங்குகின்ற பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

கல்வியில்லாத இருட்டறை வாழ்கையில் இருந்து பெற்றாரகிய நாம் அறிவு வெளிச்சத்துக்கு வரவேண்டும். நமது வருங்காலச் செல்வங்கள் படிக்க வேண்டும். பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். என்ற நல்ல எண்ணங்களை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
இன்று திருணம்,கத்னா,குடிபுகுதல் போன்ற சாதாரண நிகழ்சிகளுக்கொல்லாம் இலட்சக்கணக்கில் செலவிடுபவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். அதே வேலை கல்விக் கண்ணைத் திறப்பதற்கு வறுமையொறு தடைக்கல்லாக இருப்பதால் கல்விப்பயணத்தை தொடர முடியாது பலர் மிகவும் தவிக்கின்றார்கள்.



இத்தகைய அறிவுத்தாகத்தில் இருந்து கஸ்டப்படுபவர்களுக்க நாம் கை கொடுத்து உதவி செய்ய வேண்டும். நமது சமூகத்தில் வைத்தியர்கள்,பொறியிலாளர்கள் ,சட்டத்தரணிகள் எழுது விளைஞர்கள் ,கணக்காளர்கள் மேல்பட்டதாரிகள் ,சிறந்த ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் போன்றோர் தொடரணியில் வெளிவர முஸ்லிம் சமூதாயம் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தை மட்டும் காலமும் நம்பிக் கொண்டிருக்காமல் கல்விக் கூடங்கள்,விஞ்ஞான கூடங்கள்,பொறியியல் பயிற்சிக் கல்லூரிகள் போன்றவற்றை உருவாகத் தெண்டிக்க வேண்டும். நாளை நமது இஸ்லாமிய உம்மத்து கல்வியறிவு இல்லாது கைகட்டி நிற்கக் கூடாது. அதற்காக செய்ய வேண்டிய அத்தனை சிரமங்களையும் இன்று முதல் தலைமேல் கொண்டு செயல் படுவோமாக!

Manaleerul Anwar
Aalima Nooriyyah



Share:

Total Pageviews