சமூகத்தை வழி நடாத்தும் சிறந்த ஆலிமாக்களை உருவாக்குவோம ஈருலகில் வெற்றி பெறுவோம்

كلية مناضير الانوار العربية للسيدات

மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி

Wednesday, February 13, 2019

குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி

ladies arabic college eravur srilanka
கேஷியஸ் கிளே என்று அழைக்கப்பட்ட அந்த 12 வயது ஆக்ரோசமான முரட்டுச் சிறுவன் குத்துச்சண்டை பயின்று வெற்றிகளை மட்டுமே குவித்தான்  20 வயதில் உலகில் சிறந்த குத்து சண்டை வீரர்களை எல்லாம் தோற்கடித்தான். உலகின் ஹெவி வெய்ட் பாக்சராக வென்றதும்  கேஷியஸ் கிளே  மக்களைப் பார்த்து  ”Who is the greatest…  Who is the greatest” என்று கோப ஆக்ரோசமாக வெறி கொண்டு கேட்டான்.



மௌனமாக இருந்த மக்களை பார்த்து  ”Cassius clay is the greatest”  என்று கூவினான்.  அரங்கம் ஆர்பரித்தது “Clay is the greatest” அதன் பின் அவனின் எல்லா போட்டிகளிலும் ‘Clay is the greatest’ என்பதே முழக்கமாக இருந்தது.



மொத்த போட்டிகள் 61. வெற்றி பெற்றது 56. நாக் அவுட் முறை வெற்றி 37. வெற்றி வாய்ப்பு நழுவியது 5. இது அந்த ஆக்ரோச இளைஞனின் சாதனை வரலாறு.



பின் ஒரு நாளில் இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கேஷியஸ் க்ளே இஸ்லாமைத் தழுவினார். முஹம்மது அலி என பெயர் கொண்டார். செய்தி அறிந்து பேட்டிக்கு குவிந்தனர் நிருபர்கள்.



அவர்களை பார்த்து கேட்டார். “Who is the greatest…?” நிருபர்கள் “Muhammed Ali is the greatest” என்றனர். Who is the greatest என்று வினவும் போதெல்லாம் பதில் வரும் வரை ஆக்ரோசமாக இருப்பவர் புன்னகையுடன் அமைதியாக கை உயர்த்தி “Allah is the greatest”, என்றார்.  கூடியிருந்த கூட்டமும் அதையே கூறியது.



அந்த முஹம்மது அலி என்னும் சாதனையாளர் 1942 ல் கேஷியஸ் க்ளேவாக ஜனித்து முஹம்மது அலி என ஆனவர் 2016 ல் அமெரிக்க காலண்டர் படி  ஜூன் 3 அன்று, (இந்தியக் காலண்டர் படி ஜூன் 4  மாலையில் )  மரணம் அடைந்தார்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Share:

Total Pageviews