சமூகத்தை வழி நடாத்தும் சிறந்த ஆலிமாக்களை உருவாக்குவோம ஈருலகில் வெற்றி பெறுவோம்

كلية مناضير الانوار العربية للسيدات

மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி

Wednesday, December 12, 2018

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?
ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?"
விளக்கம்:

பகுத்தறிவுள்ள மனிதன் மட்டும்தான் மற்றொருவரிடம் முறையிட முடியும்,பகுத்தறிவில்லாத ஷரீஅத் எப்படி முறையிடும் என்பது அவரது சந்தேகம்.

பகுத்தறிவில்லாத பேரிச்ச மரமட்டை கண்மணி நாயகம்صل الله عليه وسلم  அவர்களிடம் முறையிட்டது. பகுத்தறிவில்லாத குடும்ப உறவு அல்லாஹ்விடம் முறையிட்டது.
ஸஹுஹான ஹதீஸ்களில் வந்த செய்தி கள் இவை.

ஜாபிர் رضي الله عنه  அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி صلى الله عليه وسلم அவர்கள் நின்று குத்பா ஓதிய ஒரு பேரிச்ச மரத்தின் அடித்தூண் இருந்தது புதிய மிம்பர் வைக்கப்பட்ட போது.(கர்ப்பிணி ஒட்டகைகளிலிருந்து வெளிப்படுவது போன்ற) அழுகுரலை நாங்கள் அந்தப்பேரீச்சைத் தூணிலிருந்து கேட்டோம்.அப்போது நபிصل الله عليه وسلم  அவர்கள் இறங்கி வந்து தமது கையை அதன் மீது வைத்தார்கள்
(புஹாரி,எண்:918)

அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹுத்தஆலா படைப்புகளைப் படைத்து முடித்த போது குடும்பம் உறவு எழுந்தது.'என் உறவை விட்டும் விலகிவிடுவதைப் பற்றி உன்னிடம் காவல் தேடும் நேரம் இது என்றது.
'உன்னை இணைத்தவர்களை நானும் இணைப்பதும்,உன்னைத் துண்டித்தவர்களை நானும் துண்டிப்பதும் உனக்கு திருப்தி தானே!
என்று அல்லாஹ் பதிலுரைத்தான்"
(பஹாரி,எண் 5987).

பகுத்தறிவில்லாத பேரீத்த மரக்கட்டையும்,குடும்ப உறவும் முறையிடும் போது அறிவுகளின் சங்கமமான ஷரீஅத் முறையிடுவதில்  என்ன ஆச்சரியம்?
தான் கேட்டும்; அறிந்தும் மட்டும்தான் உண்மை என்ற இறுமாப்பினால் வந்த வினைதான் இவை போன்ற விமர்சனங்கள்.

sahmith Nooriyyah
Share:

முஹ்யத்தீன் மவ்லீத் பற்றி தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள்

முஹ்யத்தீன் மவ்லீத் பற்றி தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள்
மார்க்கத்தின் முறையீடு
விமர்சனம்:~ 01
அபூபக்கர் அல்ஹமாமி" என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவராகவும் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட செயல்கள் உடையவராகவும் இருந்தார். அவரிடம் "அப்துல் காதிர் ஜீலானி" அவர்கள் நீ வரம்பு மீறியதால் உன்னைப்பற்றி ஷரீஅத் என்னிடம் முறையிடுகின்றது' என்று கூறினார்கள். மேலும் சில காரியங்களை விட்டும் அவரை தடுத்தார்கள். அவர் தவிர்ந்து கொள்ளவில்லை.
அவரது நெஞ்சில் கையை வைத்து "அபூபக்கரே!" பக்தாதை விட்டும் அதன் சுற்றுப்புறங்களை விட்டும் வெளியேறு என்று கூறினார்கள்.
இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவரைப்பற்றி ஷரீஅத் எப்படி முறையிடும்?
விளக்கம்:~
இறைவனால் என்ற சொல் இவராகச் சேர்த்துக்கொண்டது மவ்லிதில் அவ்வாறு இல்லை
كان من ذي الأحوال الرضية والأفعال المرضية
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட நிலைகளும்
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட செயல்களும் உடையவராக இருந்தார்.
என்பதுதான் இதன் பொருள்.
அவருடைய வெளிப்படையான நிலைகளும் செயல்களும் மக்களால் பொருந்திக்கொள்பவையாக இருந்தன.
அந்தரங்கத்தில் அவரிடம் சில குறைகள் இருந்தன. இதன் படி பொருந்திக்கொள்வதற்கும் ஷரீஅத் முறையிடுவதற்குமிடையில் முரண்பாடு எதுவுமில்லை. "இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட" என்று பொருள் வைத்தாலும் ஷரீஅத் முறையிடுவதில் பிரச்சினை ஏதுமில்லை .
இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்களிடம் சிற்சில தவறுகள் நிகழலாம்.
நபிமார்கள் மலக்குகளிடம் தவறுகள் நிகழாது. மற்றவர்களிடம் பாவங்கள் நிகழலாம் என்றிருக்க அவர்களிலும் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் உள்ளனர்.
அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் நபிமார்கள் மலக்குமார்கள் மட்டும் இல்லையே!
ஸஹாபாக்களிடம் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஸஹாபாக்களைக் குறித்து அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்.
(தவ்பா:100) Qur'an: At-Tawba (9:100)
وَلسَّٰبِقُونَ لْأَوَّلُونَ مِنَ لْمُهَٰجِرِينَ وَٱلْ أَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحْسَٰنٍ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّٰتٍ تَجْرِى تَحْتَهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيم
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
என்று அல்குர்ஆனில் கூறுகின்றான்.
எனவே இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட ஒருவரைப்பற்றி ஷரீஅத் முறையிடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.


விமர்சனம்:- 02
"யாரும் இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்பதற்கு இவை சான்றுகள்"
விளக்கம்:- ' எந்தப் பார்வைகளும் அவனை அடையாது' (6:103) 'மூஸா நபியால் அவனை பார்க்க இயலவில்லை' (7:43) என்பன போன்ற சில ஆதாரங்களைச் சொன்ன பிறகு மேற்ச்சொன்ன வாசகத்தை அவர் எழுதியுள்ளார். இந்த ஆதாரங்கள் இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் காண முடியாது என்பதைத் தெரிவிப்பதாக அவர் கருதுகிறார்.
'எந்தப் பார்வைகளும் அவனை அடையாது, என்பதன் பொருள் அல்லாஹு தஆலாவை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதாகும். அதைத்தான் குர்ஆனில் செல்லப்பட்ட ﻻتركه என்ற வார்த்தை குறிக்கும். அறவே பார்க்க முடியாது என்பதற்கு ﻻيبصر ﻻيري என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லப்பட்ட பதில் 'நிச்சயமாக நீங்கள் எஎன்னைப் பார்க்க மாட்டீர்கள் 'என்பதாகும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட உயர்ந்தவர்களான நபி صلى الله عليه وسلم அவர்கள் பார்ப்பதை இவ்வசனம் மறுக்கவில்லை.
மேலும் புறக் கண்களால் பார்ப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டபோதூ அது மறுக்கப்பட்டது.
இந்த மறுப்பு அகக் கண்களால் வலிமார்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதற்கு முரணாகாது.
விமர்சனம்:-
"மனிதர்களுடன் எவற்றைப் பேச அல்லாஹ் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான். எவரிடமும் இறைவன் பேசவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. என்ற சாதாரண அறிவு கூட மௌலிதை எழுதியவருக்கு இல்லை".
விளக்கம் :-
'மனிதர்களுடன் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான்' என்று கூறுதல் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்ட அஹ்லுல் குர்ஆன் எனும் நவீன இயக்கத்தினரின் வாதமாக ' குர்ஆன் மட்டும்தான் ஆதாரம், ஹதீஸ்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது 'என்று அஅவ்வியக்கத்தினர் கூறுகின்றனர். ஹதீஸ்கள் என்பவை நபி صلى الله عليه وسلم அவர்கள் சுயமாக சொன்னவை அல்ல .அவையும் அல்லாஹ் அறிவித்து கொடுத்தவைதான்.
ஹதீஸ்களில் 'ஹதீஸ் குத்ஸி' என்று ஒரு வகை உண்டு'அல்லாஹூ தஆலா சொன்னான்' என்று கூறி நபி صلى الله عليه وسلم அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள். இவற்றை மறுக்கும் விதமாக அவரது மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.
நபிமார்கள் அல்லாதவர்களுக்கு இல்ஹாம் மற்றும் மனாம்களின் மூலமாகவும் இறை அறிவிப்புகள் வெளிப்படுகின்றன.
'நநுபுவ்வதில் நின்றும் சுபச் செய்திகள் அல்லாமல் மிஞ்சவில்லை' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற 'சுபச் செய்திகள் என்பவை யாவை?'என ஸஹாபாக்கள் கேட்டனர். 'நல்ல கனவுகள் 'என நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள் (புஹாரி எண் :6990)
நபி صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள் :'முஃமினின் கனவு நுபுவ்வதின் நாற்பத்தி ஆறில் ஒரு பகுயாகும்' (புஹாரி எண்:6988)
கனவுகள் மூலமாகவும் அல்லாமலும் இறைவன் புறத்திலிருந்து தெய்வீக உதிப்புகள் வருகின்றன, அவை நுபுவ்வத்தை போன்ற உண்மையானவைதான் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றன.
ஆகவே அல்லாஹ் பேச நாடியவை குர்ஆன் மட்டும்தான் என்ற அவரது வாதம் சுக்கு நூறாக உடைகிறது.
F Asmiya Nooriyyah


விமர்சனம் : 03
அப்படியே முறையிடுவதாக இருந்தாலும் ஷரீஅத்துக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்விடம் முறையிடாமல் இவர்களிடம் ஏன் முறையிட்டது?
விளக்கம் :
(இது அறிவு சார்ந்த கேள்வி அல்ல!ஷரீஅத் சட்டங்களை உருவாக்கிய அல்லாஹுதஆலா தனது சட்டங்களை நேரடியாக அவனே வந்து உலகில் அமுல் படுத்தவில்லை.
நபிமார்கள் ,அறிஞர்கள்,ஆட்சியாளர்கள் மூ
லமாகத்தான் சட்டங்களை அமுல்படுத்துகின்ரான்.
இவ்வுலகில் மக்களுக்கு சட்டங்களை ஏவுபவர்களாகவும் ,மீறினால் அவர்களை தண்டிப்பவர்களாகவும் இம்மூன்று பிரிவினரும் இருக்கின்றனர் .
அல்லாஹுதஆலா குர்ஆனில் கூறுகின்றான்:
"நாம் பூமியில் பிரதிநிதிகளை நியமிக்கிறோம் "(அல்பகரா:30)
பூமியில் சரீஆத் சட்டங்களை அமுல்படுத்துபவர்களாக நபிமார்கள், ஆட்சியாளர்கள் இருக்கும் போது சட்டங்கள் மீறப்படும் நேரங்களில் அவர்களிடம் முறையிடுவதுதான் பொருத்தம்.
ஷரீஅத் சட்டங்கள் மீறப்பட்ட போது ஸஹாபாகள் ஷரீஅத் சட்டங்களுக்குச் சொந்தக்காரனான அல்லாஹ்விடம் முறையிடாமல் அல்லாஹ்வின் பிரதிநிதியான
கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடமும் ஏனைய ஸஹாபாக்களிடமும் முறையிட்டார்கள்.
அபூமஸ்வூத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடத்தில் வந்து 'அல்லாஹ்வின் ரஸூலே!அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். இன்ன நபர் தொழுகையை நீட்டுவது காரணமாக ஸுபுஹுத் தொழுகையில் கலந்து கொள்ளலாமல் இருக்கிறேன் என்று கூறிய போது நபி صلى الله عليه وسلم அவர்கள் வேறு எந்த நாளிலும் பார்த்திராத அளவு கடும் கோபத்துடன் அதைக் கண்டித்து சொற்பொழிவு வாற்றினார்கள் .(புகாரி :எண் 702)
ஸுபைர் இப்னு அதி رضي الله عنه அவர்கள் சொல்கிறார்கள் "நாங்கள் அனஸ் رضي الله عنه அவர்களிடம் சென்று ஹஜ்ஜாஜின் கொடுமைகளைச் சொல்லி முறையிட்டோம். பொறுத்துக் கொள்ளுங்கள் வருகிற ஒவ்வொரு கால கட்டமும் அதற்கு முந்தைய காலகட்டத்தை விட மோசமாகத்தான் இருக்கும். இதனை உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நான் கேட்டேன்"என்று கூறினார்கள்.(புகாரி :எண் 7068)
ஒரு ஸஹாபி தொழுகையை நீட்டிய போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். ஹஜ்ஜாஜிப்னு யூசுப் ஷரீஅத்துக்கு எதிராக கொடுமைகள் புரிந்த போது அனஸ் رضي الله عنه அவர்களிடம்
முறையிட்டார்கள். ஷரீஅத்துக்குச் சொர்தக்காரனான அல்லாஹ்விடம் முறையிடவில்லை.

Moulaviya A.R Asmiya Nooriyya
Moulaviya F  Asmiya Nooriya 
Moulaviya AR Aseena Nooriyyah
Share:

Total Pageviews